பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow சிறிலங்காவை பயங்கரவாத நாடாக அறிவிக்க கோரி புதுடில்லியில் மாநாட
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

சிறிலங்காவை பயங்கரவாத நாடாக அறிவிக்க கோரி புதுடில்லியில் மாநாட அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 17 August 2006
எதிர்வரும் ஆகஸ்ட் 30 ஆம் திகதி இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் கிருஷ்ணமேனன் வீதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சராகிய ஜோர்ஜ் பெர்னாண்டஸின் இல்லத்தில் முக்கிய மாநாடு ஒன்று பெர்னாண்டஸ் உட்பட பல பிரபல இந்திய அரசியல் பிரமுகர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் ஒழுங்கமைப்பு உத்தியோகத்தராகிய அரசியல் பிரமுகர் நந்தி வர்மன்இ மாநாடு சம்பந்தப்பட்ட தகவல்களை அறிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் உட்பட பல இந்திய அரசியல் பிரமுகர்கள் பங்கு பற்றும் இந்த மாநாடு கூட்டப்படுவதன் நோக்கம் சிறிலங்காஇ இஸ்ரேல்இ பாகிஸ்தான் ஆகிய நாடுகளை பயங்கரவாத நாடுகளாகப் பெயர்ப்பட்டியலிட்டு இந்தியா சார்பில் அரசு பிரகடனப்படுத்தும் படி இந்திய ஆளும் அரச தரப்பைக் கோருவதே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு மேற்படி மூன்று நாடுகளையும் பயங்கரவாத நாடுகளாக பிரகடனப்படுத்துவதை வற்புறுத்தி இந்திய பாராளுமன்றத்தின் முன் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்துவதும் மேற்படி மாநாட்டின் நோக்கமாகும்.

இவ்வாறு முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸின் இல்லத்தில் நடத்தப்படவிருக்கும் மாநாடு மற்றும் இந்தியப் பாராளுமன்றம் முன் மேற்கொள்ளப்படவிருக்கும் உண்ணாவிரதப் போராட்டம் ஆகியவற்றில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்இ இந்தியாவின் முன்னாள் அமைச்சர்களாகிய மேற்படி ஜோர்ஜ் பெர்னாண்டஸ் உட்பட திக்விஜேசிங்இ ஜனதா தள் கட்சித் தலைவர் சிவகுமார் அனில் ஹேஜ் குமார் தம்பி மற்றும் பல பிரபல இந்திய அரசியல் வாதிகள்இ குறிப்பாக ஆளும் இந்திய அரசின் எதிர்த்தரப்பு அரசியல் பிரமுகர்கள் பங்கெடுக்கவுள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரிக்கும் முன்னணி இந்திய அரசியல் பிரமுகரும் முன்னாள் அமைச்சருமான ஜோர்ஜ் பெர்னாண்டஸ் இந்த மாநாட்டை முன்னின்று கூட்டுவதன் முக்கிய நோக்கம் புலிகள் இயக்கத்தின் "ஈழம்" கொள்கையை மீண்டும் ஒரு முறை இந்திய அரசியலுக்குள் புகுத்துவதேயாகும்.

-திவயின விமர்சனம்:13.08.2006 - 
நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..