|
போர் நடவடிக்கைகளை உடனே கைவிட அமெரிக்கா வலியுறுத்தல் |
|
|
|
Friday, 18 August 2006 |
இலங்கையில் போர் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் கைவிட வேண்டும் என்று அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் ஸ்டீவ் மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக இருநாள் பயணமாக நேற்று வியாழக்கிழமை அவர் இலங்கை வருகை தந்தார்.
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை நேற்று மாலை சந்தித்த ஸ்டீவ் மான்,
அண்மைய மோதல்கள் குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலை கொள்வதாகத் தெரிவித்தார்.
"இந்த மோதல்களுக்கு விடுதலைப் புலிகளே முதல் பொறுப்பானவர்கள்" என்றும் அவர் கூறினார்.
அதேநேரத்தில் சிறிலங்கா அரசாங்கமானது சட்டப்பூர்வமான முறைமைகளுக்கு
கட்டாயம் முகம் கொடுக்க வேண்டும் என்றும் சிறிலங்காவின் பிரதேச
ஒற்றுமைக்கு குந்தகம் இல்லாத வகையிலான தீர்வு காணப்பட வேண்டும் என்றும்
ஸ்டீவ்மான் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரையும் ஸ்டீவ் மான் சந்தித்துப் பேசினார்.
நெருடல் இணையம்
|