பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow இலங்கைக்கு இராணுவ ரீதியில் இந்தியா உதவினால்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

இலங்கைக்கு இராணுவ ரீதியில் இந்தியா உதவினால் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 20 August 2006

அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு இராணுவ ரீதியிலான எந்தவித உதவியையும் இந்தியா வழங்கக்கூடாது. அவ்வாறு இந்தியா உதவினால் கிராமம் கிராமமாகச் சென்று ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு திரட்டுவேன் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இராமநாதபுரம் மாவட்ட ம.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் நேற்று முன்தினம் மாலை முதுகுளத்தூரில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அ“வர் மேலும் தெரிவிக்கையில்; இலங்கைத் தமிழர்களை அடியோடு அஷ்த்துவிட வேண்டுமென்ற இனவெறியோடு சிங்கள இராணுவத்தினர் அவர்களை தாக்கி வருகின்றனர். எங்கு தமிழர்களை அழிக்கப்பட்டாலும் அவர்கள் வேர்விட்டு முளைப்பவர்கள் என்பதை இராணுவத்தினர் இன்னும் உணரவில்லை.

தமிழர்களின் தடத்தை அழிக்க நினைக்கும் சிங்கள இராணுவத்திற்கு எந்த சூழ்நிலையிலும் இந்தியா உதவக்கூடாது. அவ்வாறு உதவினால் அது தமிழக மக்களையும் ஏமாற்றும் செயல். அனைத்தையும் மீறி அவ்வாறு இலங்கை அரசுக்கு இராணுவ உதவியை இந்திய அரசாங்கம் வழங்குமானால் கிராமம் கிராமமாகச் சென்று ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு திரட்டுவேன் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..