|
செப். 12 இல் இணைத்தலைமை நாடுகளின் கூட்டம் |
|
|
|
Thursday, 24 August 2006 |
|
இலங்கை சமாதான நடவடிக்கைகளுக்கான இணைத் தலைமை நாடுகளின் கூட்டம் எதிர் வரும் செப்ரெம்பர் மாதம் 12 ஆம் திகதி பிரெஸ்ஸெல்சில் நடைபெறவுள்ளது. யுத்தநிறுத்த உடன்படிக்கையின் தற்போதைய நிலவரம் மற்றும் ஜெனிவா பேச்சுவார்த்தைகளின் பின்னர் இடம்பெற்று வரும் வன்முறைகள் சம்பந்தமாக இக்கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் இக்கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.இக்கூட்டத்தின் முடிவில் இணைத்தலைமை நாடுகளினால் அறிக்கையொன்றும் வெளியிடப்படவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார ஆணையாளர் பெனிட்டா பெரைரோ வால்ட்னர், நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தியமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், ஜப்பானின் விசேடப் பிரதிநிதி யசூசி அகாசி, அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் நிக்கலஸ் பேர்ன்ஸ் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். நெருடல் இணையம்
|