பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow தமிழீழ வான்படை எமது தேசக்கட்டமைப்பின் முழுவடிவம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

தமிழீழ வான்படை எமது தேசக்கட்டமைப்பின் முழுவடிவம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 27 August 2006
உலக அரங்கில் விடுதலைக்காக போராடிய, போராடும் அமைப்புக்களில் விடுதலைப் புலிகள் தனிச்சிறப்பு வாய்ந்தவர்கள். போராடும் காலத்திலேயே ஒரு நாட்டிற்குரிய உட்கட்டமைப்புக்களை சிறப்பாக நிறுவியதுடன், ஒரு வலிமையான தேசத்திற்குரிய முழுமையான படை அமைப்பையும் கொண்டுள்ளார்கள். தரைப்படை, கடற்படை, காவல்படை, விசேட படை அணிகள் என விரிவாக்கம் பெற்ற படையணிகள் தற்போது விமானப்படையையும் கொண்டுள்ளது.
ஆரம்ப காலம் தொடக்கம் புலிகள் விமானங்களை கட்டுவதில் அக்கறை காட்டி வந்துள்ளார்கள். 1986 இல் புலிகளின் தொழில்நுட்ப பிரிவுப்பொறுப்பாளர் கப்டன் வாசு, கேணல் கிட்டு ஆகியோரின் முயற்சியில் உள்ளுரிலேயே விமானம் கட்டப்பட்டு யாழ். கல்லுண்டாய் வெளியில் பரிசித்தும் பார்க்கப்பட்டது ஆனால் அன்று அம் முயற்சி முழுமையாக வெற்றிபெறவில்லை.

பின்னர் முதன் முதலாக 1998 இல் கார்த்திகை மாதம் முல்லைத்தீவின் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் அகவணக்க நிகழ்வின் போது விடுதலைப் புலிகளின் வான்புலிகள் தமது இரு விமானங்கள் மூலம் மலர்தூவி வணக்கம் செலுத்தியிருந்தனர். இது தான் தமிழீழ வான்படையின் முதற்பறப்பு. கேணல் சங்கர் விமானப்படையணிக்கு பொறுப்பாகவும் இருந்தார். இதன் பின்பு திகைத்து எழுந்த சிங்கள அரசு தனது புலனாய்வு அமைப்புக்களையும், சர்வதேச, ஆசிய நாட்டு புலனாய்வு அமைப்புக்களையும் முடுக்கிவிட்டு புலிகளிடம் உள்ள விமானம் எத்தகையது அதன் தாக்கம் என்ன என அறியமுற்பட்டது.

இறுதியில் புலிகளிடம் இரண்டு கிளைடர் வகை விமானங்களும் (புடனைநச pடயநௌ), றொபின்சன் ரக (சு-44) ளுiபெடந சழவழச டிடயனந உடைய இரண்டு இலகு உலங்குவானூர்திகளும் உள்ளன எனவும். அவற்றைக்கொண்டு புலிகள் தற்கொலை பாணியிலான தாக்குதலையே நடத்தமுடியும் என தனக்கு தானே ஆறுதல் கூறியதுடன் உலகையும் ஏமாற்றி இருந்தது.

விடுதலைப் புலிகளிடம் விமானம் உள்ளதும், விமான ஓடுபாதை உள்ளதும் அரசிற்கு பெரும் நெருக்கடியான விடயம். விமானம் மூலம் தாக்குதலையோ அல்லது நகர்வுகளையோ விடுதலைப் புலிகள் மேற்கொள்ளலாம் என்பது ஒருபுறம். விடுதலைப் புலிகளிடம் பலமான கடற்படை உண்டு என்பதும் அதை தோற்கடிக்க சிங்கள அரசால் முடியாது என்பதும் உலகறிந்த உண்மை. தற்போது விமானப்படையும் உள்ளது என்பதுடன் அதன் வளர்ச்சியையும் உலகு ஏற்றுகொண்டு விட்டால் ஒரு முழு அளவிலான தேசத்திற்குரிய கட்டமைப்புக்களை விடுதலைப் புலிகள் பெற்று விடுவார்கள் என்பதுமாகும். எனவே தான் புலிகளின் விமானப்படையையும் அதன் விமானங்களையும், விமான ஓடுபாதையையும் அழிப்பதில் அரசு தீவிரம் காட்டுகிறது. எங்கு தாக்குதல் நடந்தாலும் முல்லைத்தீவில் விமான ஓடுபாதை, விமானத்தளம் என கருதும் பகுதிகளை இலக்குவைத்து தாக்குவதற்கு அரசு தவறுவதில்லை.

மேலும் 2006 இல் சர்வதேச புலனாய்வுத்துறை கொடுத்த தகவலின் படி புலிகளிடம் 05 செக்கொஸ்லாவாக்கியா தயாரிப்பான ணுடin ணு-143 ரக விமானங்கள் உள்ளன எனவும். அவற்றால் குண்டுகள் வீசமுடியாது ஆனால் 250-450 முப நிறையுடைய குண்டை காவிச்செல்ல கூடியதுடன் பறக்கும் வெடிகுண்டுகளாக (குடலiபெ டிழஅடி) இவற்றை புலிகள் பயன்படுத்தக்கூடும் எனவும் அரச ஊடகங்கள் ஆரூடம் கூறியிருந்தன.

அரசின் ஊகங்களையும், இருட்டடிப்புக்களையும் பொய்யாக்கி விட்டது 11.08.2006 அன்று பலாலியில் நடந்த புலிகளின் விமானத்தாக்குதல். இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலையத்திற்குள் மிக இலகுவாக ஊடுரூவிய விமானம் உந்துகணை தாக்குதல் மூலம் இராணுவ முகாமின் கட்டுப்பாட்டு தொலைத்தொடர்பு கோபுரத்தையும் பெல்-212 ரக உலங்குவானூர்தியையும் தகர்த்துவிட்டு பாதுகாப்பாக தளம் திரும்பிவிட்டது.

தமிழீழ வான்படை பலாலியை தாக்கிய செய்தி அறிந்ததும் தாயகத்தில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும், உலகெங்கும் தமிழர் வாழும் தேசமெங்கும் மிகப்பெரும் மகிழ்ச்சி பேரலை எழுந்தது. உலகில் தமிழன் கொண்ட முதலாவது கம்பீரமான விமானப்படையான வான்புலிகளும் அதன் தாக்குதல் செய்தியும் தான் மகிழ்ச்சியின் காரணம்.

1998 இல் கிங்குராங்கொடவில் கூட்டம் ஒன்றில் பேசும்போது அன்றய பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தை 'புலிகளிடம் விமானம் இருப்பது உண்மையானால் பிரபாகரன் தனது தாயாரை கொழும்புக்கு அனுப்பி அதை நிரூபிப்பாரா" என கேட்டிருந்தார். இன்று வான்புலிகள் சிங்கள அரசின் அதியுயர் பாதுகாப்புத் தளமான பலாலியிலேயே விமானத்தாக்குதலை நடத்திவிட்டு வெற்றிகரமாக திரும்பிவிட்டனர். ஆனால் ரத்வத்தை தான் பதவியில் இல்லை.

முதலில் ஒரு பட்டம் கூட பறக்கவில்லை என வீராப்புபேசிய அரசு பின்னர் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் ஒப்புக்கொண்டுள்ள அரசுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது இந்த தாக்குதல். அதாவது பறக்கும் குண்டாக சிறியரக விமானத்தையே புலிகள் பயன்படுத்துவார்கள் என எண்ணிய அரசுக்கு புலிகளின் விமானம் உந்துகணை தாக்குதலை நடத்திவிட்டு திரும்பிச்சென்றது பெரும் ஆச்சரியம். சாதாரணமான இலகு ரக விமானங்களால் உந்துகணைத் தாக்குதலோ அல்லது குண்டுத்தாக்குதலோ நிகழ்த்த முடியாது.

அதாவது ஒரு சிறிய விமானத்தில் வந்து அதன் கதவை திறந்து சுPபு-7 இனால் அடித்துவிட்டு செல்லமுடியாது என்பது சிறு குழந்தைக்கும் தெரியும். உலங்குவானூர்தி எனில் இது சாத்தியப்படலாம் ஏனெனில் இரண்டிற்குமான தொழில்நுட்பம், பொறிமுறைகள் என்பன வேறுபட்டது. எனவே புலிகள் மிகச்சிறந்த தாக்குதல் விமானத்தையே பலாலித் தளம் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தி உள்ளார்கள். உந்துகணைகளும், குண்டுகளும் வெளியில் பொருத்தக்கூடியதும் அதை விமானி உள்ளே இருந்து இயக்கக்கூடியதுமான விமானமே தாக்குதலை நடத்தியுள்ளது.

கடந்த ஆண்டு ஐப்பசியில் வன்னி வான்பரப்பில் போர்நிறுத்த உடன்பாட்டை மீறி வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிங்கள அரசின் ஆளில்லா வேவுவிமானம் (ருnஅயnநென யுநசயைட ஏநாiஉடந) விஞ்ஞானகுளத்திற்கும் கரப்புக்குத்திக்கும் இடையில் வீழ்ந்து நொருங்கியது. இந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பின் அதனுடனான தொடர்பு சிறிது நேரம் இருந்திருக்கும் என கூறும் அமெரிக்காவை தளமாக கொண்ட ருயுஏ நிபுணர் குழு, இயந்திரம், மின்பிறப்பாக்கி, தொலைத் தொடர்புச்சாதனம் எல்லாம் ஒரே நேரத்தில் நின்று போனதானது விமானம் எதிரி விமானத்தால் தாக்கப்பட்டதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம் எனக் கூறியிருந்தது. இதற்கு முதலும் 05 ருயுஏ விமானங்களை சிங்கள அரசு இழந்திருந்தது ஆனால் அதன் போது எல்லாம் விமானங்கள் ஓட்டுமொத்தமாக செயலிழந்தது கிடையாது.

மிகவும் சிறியதும் 15,000 அடி உயரம் வரை பறக்கக்கூடியதுமான இந்த விமானம் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளினால் இலகுவாக சுடப்பட முடியாதவை. அதாவது தாக்குதல் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்கலாம் என்பதே நிபுணர்களின் கருத்து. அன்று புலிகள் இது தொடர்பாக கருத்து எதுவுமே தெரிவிக்கவில்லை. ஆனால் ஊடகங்கள் வான்புலிகளின் முதற்தாக்குதல் என இதை விபரித்தும் இருந்தன.

கெக்கூல்ஸ்-ஊ-130 ரக கனரக சரக்கு விமானம் முழுநிறையுடன் தரையிறங்கக்கூடிய விமான ஓடுதளம் புலிகளிடம் உண்டு எனவும் அப்படியானால் புலிகளிடம் கனரக விமானங்கள் இருக்குமோ என்ற பீதியில் இருந்த அரசிற்கு பலாலி மீதான தாக்குதல் வயிற்றில் புளியை கரைப்பதாகவே இருக்கும். ஏனெனில் புலிகளிடம் நவீன தாக்குதல் விமானம் (குiபாவநச துநவ) இருக்குமாயின் சிங்கள அரசின் விமானத்தளங்கள், கடற்படைக்கப்பல்கள், கடற்படைத்தளங்கள், கட்டளை மையங்கள், பொருளாதார நிலைகள் என்பவற்றின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும்.

சிங்கள அரசிடம் கிபீர் ஊ-2, கிபீர் ஊ-7, மிக்-27 போன்ற நவீன போர் விமானங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றின் தாக்குதல் இலக்குகள் தெளிவற்றவை. பெரும்பாலும் பொதுமக்களின் வாழ்விடங்களே தாக்கப்படுபவையாக இருக்கின்றன. புலிகளின் விமானப்படையணியை பொறுத்தவரை அதன் தாக்குதல் மற்றும் தாக்கப்பட வேண்டிய இலக்குகள் மிகத்தெளிவானவையாக இருப்பதுடன் சிங்கள வான் படை புலிகளின் ராதா வான்காப்புப் படையணி, வான்புலிகள் என தற்போது இரு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளது.

மூன்றாம் ஈழப்போரிலும் அதன் பின்பும் இன்று வரை விடுதலைப் புலிகளின் விமான எதிர்ப்பு படையணியின் தாக்குதல்களிலும், ஊடுருவி மேற்கொண்ட அதிரடித்தாக்குதல்களிலும், விபத்துக்களாலும் சிங்கள வான்படை 50-க்கும் மேற்பட்ட வான்கலங்களை இழந்திருக்கிறது. இரண்டாம் ஈழப்போரில் உருவாகிய கடற்புலிகள் இன்று எப்படி சிங்கள தேசத்திற்கும் அதன் கடற்படைக்கும் சிம்மசொப்பனமாக உள்ளார்களோ அதேபோலவே காலத்தின் தேவை அறிந்து தேசியத்தலைவரால் உருவாக்கப்பட்ட வான்புலிகளும் சிங்கள அரசிற்கு மிகப்பெரும் நெருக்கடியை எதிர்காலத்தில் ஏற்படுத்தப் போவது நிச்சயம்.

அருஸ் (வேல்ஸ்)
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..