|
எதிரிக்கு எதிரி நண்பன்? - இலங்கையில் பாகிஸ்தான்? |
|
|
|
Friday, 01 September 2006 |
|
நெருடலுக்காக திருமலையிலிருந்து தமிழ் அழகன்
இவ்வாரம் திருமலை வடகரை வீதியில் திடீரென இரு சொகுசு லாண்ட் குரூஸர் வாகனங்கள் வந்திறங்கின. கூடுதலான பாதுகாப்புடன் வந்த இவ்வாகனங்களில் ஹிந்தி போன்ற மொழி பேசக்கூடிய பத்து உயர்மட்ட உயர்ந்த அதிகாரிகள் பெரிய இராணுவ அதிகாரிகளின் தோறனையில் வந்திறங்கினர். இவர்களுக்கு மொழி பெயர்ப்புச் செய்யவென பிரத்தியேகமாக சில ஆட்களும் இவர்களுடன் வந்தனர்.
இவர்கள் தங்களுக்குத் தேவையான உடுதுணிகளையும் மற்றும் இதர தேவைகளையும்
வாங்க வந்திருக்கலாம். ஆனால் இவர்கள் திருமலை துறைமுக
கடற்படைத்தளத்திலிருந்து வருகை தந்தததற்கான சான்றாக கடற்படை
அதிகாரிகளையும் மக்கள் அவதானித்துள்ளனர். புறப்பட்டு வந்த இவர்களை
அவதானித்த மக்கள் இவர்கள் இந்திய இராணுவமாகத்தான் இருக்கவேண்டுமென
ஊகிக்கின்றனர். ஆனால் தற்போது இலங்கை விமானப்படையுடன் சேர்ந்து முக்கியமான
இடங்களை குறிவைத்து குண்டு போட பாகிஸ்தான் இரானுவம் இலங்கை வந்திருப்பது
ஊர்ஜிதமாகியுள்ளது.
அதனோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது அனேகமாக திருமலையில்
கடற்படைத்தளத்திற்குள் பாக்கிஸ்தானிய இராணுவம் இருப்பது மிகப்பெரியளவில்
சந்தேகப்படும்படியாகவுள்ளது. இது பெரும்பாலும் ஊர்ஜிதப்படுத்தப் பட்டதாகவே
இருக்கிறது.
இதற்கான காரணங்களாக
-
கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து கைத்தொலைபேசிகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளமை (இது போன்ற செய்திகள் வெளியில் பரவாமல் இருக்க)
-
கடற்படைத்தளத்திற்குள் வழமையாக சிவில் ஊழியர்களுக்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகள் இந்த வார முதற்பகுதியிலிருந்து தடைசெய்யப்பட்டமை
-
சில வாரமாக இலங்கை வான்படையால் பாவிக்கப்படும் குண்டுகள் இரசாயனக்
குண்டுகளாக இருப்பது புலனாகியுள்ளது. இது அனேகமாக பாகிஸ்தானிடமிருந்து
கிடைத்ததாகவே எண்ணவேண்டியுள்ளது.
-
சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு இலங்கை அரசு பாகிஸ்தான் அரச ஆதரவுடன்
வடகிழக்கு முஸ்லீம் இளைஞர்களுக்கு என தனியான இராணுவ ரெஜிமென்ட் ஒன்றை
அமைக்க முயன்று ஜே.வீ.பீயினரின் தலையீட்டினால் அது கைவிடப்பட்டது என்பது
அந்தரங்க ஆனால் அனைவரும் அறிந்த உண்மை. இலங்கை அரசு முஸ்லிம் இராணுவ
றெஜிமென்ட் ஒன்றை உருவாக்கினால் அதற்குப்பதிலாக பாக்கிஸ்தான அரசு
இலங்கைக்குத் தேவையான ஆயுத தளபாடங்களை பரிமாறுவதே ஒப்பந்தமாக இருந்தது.
கடந்த காலங்கலாக இலங்கை அரசிற்கு வந்து சேர்ந்த பெருந்தொகையான ஆயுதங்கள்
இவையனைத்தும் திருமலையில் நடமாடித்திரிவது மற்றும் தமிழ் மக்கள் மீதான
விமான ஆர்ட்டிலெறி மற்றும் பல்குழல் பீரங்கித்தாக்குதல்களுக்கு பின்னனியாக
பாக்கிஸ்தான் இராணுவம் செயற்படுகிறது என்பது ஊர்ஜிதமாகிறது.
இந்நிலையில் ஈழத்தமிழர்களை பாதுகாப்போம் என கூறுகிற எமது கூடப்பிறந்த
இந்திய அரசானது இதற்குப்பிறகும் இலங்கை இனப்பிரச்சினையிலும் தமிழ் அழிப்பு
யுத்தத்திலும் தலையிடாவிட்டால் மிஞ்சியிருக்கும் தமிழர்களும் அவர்களது
உடைமைகளும் சாம்பலாகத்தான் பார்க்கமுடியும்..
இந்தியா தான் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையில் ஆர்வமாக இருக்கிறோம்
என்று சொல்லிக்கொண்டு உறங்கும் பங்காளராக(sleeping partner) இராமல்
செயற்படும் பங்காளராக(active partner) இருந்தால் மட்டுமே ஆசியாவின்
வல்லரசிற்கு ஒரு மதிப்பும் மரியாதையும் இருக்கும் என்பதை தமிழன் என்ற
ரீதியில் தன்மானத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்ற பொன்மொழியில் ஊறிப்போன
தமிழகம் ஏன் தலைவன் பிரபாகரன் என்ற தன் மானத்தமிழனின் வீரத்தை
அங்கீகரிக்கவும் தமிழ் மக்கள் மீது தொடுக்கப்படும் தான்தோன்றித்தனமான
கொலைவெறியாட்டத்தை தட்டிக்கேட்கவும் தயங்குகிறது.
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கணக்கில் தமிழனுக்கு நண்பன் இந்தியா. எதிரி
பாகிஸ்தான் என்று கணக்குப்போட்டுத்தானே இலங்கை அரசு பாக்கிஸ்தானின் உதவியை
வாங்கி தமிழனை அழிக்கிறது.
இப்போதும் இந்தியா வாய்பேசா மடந்தையாக இருந்தால் அர்த்தம் என்ன?
நண்பனே நண்பனுக்கு எதிரியா(இந்தியா தமிழினத்திற்கு)?
அப்படியென்றால் எதிரிக்கு இரட்டை மடங்கு சந்தோசமல்லவா?
தமிழ் அழகன்
|