பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow யாழில் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்குச்சட்டம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

யாழில் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்குச்சட்டம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 18 September 2006
sized_jaffna.jpg யாழ்ப்பாணம் வலிகாமம்  மேற்குப் பிரதேசத்தில் படையினரால் இன்று அதிகாலை முதல் நண்பகல் 12மணிவரை ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
காலையில் யாழ் எவ்.எம் ஊடாக வலிகாமம் மேற்குப் பகுதியில் ஊரடங்குச்சட்டம் நீக்கப்படமாட்டாது எனவும் 513வது படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் ஊரடங்குச்சட்டம் அமூல் செய்யப்பட்டுள்ளதாகவும் நன்பகல் 12.00மணிவரை ஊரடங்குச் சட்டம் அமூலில் இக்குமெனவும்; அறிவிக்கப்பட்டது.


இதன் காரணமாக வலகாமப் பிரதேசத்திலுள்ள - வலிவடக்கு வலிதெற்கு மற்றும் வலி தென்மேற்குப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் தமது  அன்றாட நடவடிக்கைகளை மேற் கொள்வதற்காக செல்ல முயன்ற போது தமது தொழில்களுக்கோ அன்றி வேறு நடவடிக்கைகளுக்கோ செல்லவிடாது படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு வீடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதுமல்லாமல் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலையும் நடத்தினர்.

திடீரென அமுல் படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் காலையில் பலத்த சிரமங்களுக்கும் உள்ளாகியுள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை யாழ் எவ் எம் வானொலியில் அறிவிக்கப்பட்ட வலிகாமம் மேற்குப் பிரதேசங்களான சங்கானை தொட்டிலடி பண்டத்தரிப்பு சுழிபுரம் சித்தன்கேணி ஆகிய பிரதேசங்களைத் தவிர ஆறிவிக்கப்படாத பிரதேசங்களான வலிதென்மேற்கு பிரதேசத்துக்குட்பட்ட  ஆனைக்கோட்டை மானிப்பாய் சண்டிலிப்பாய் ஆகிய பிரதேசங்களிலும்வலிகாமம் பிரதேசத்தில் சில பிரதேசங்களான நாச்சிமார் கோவிலடி ப+நாறிமரத்தடி கொக்குவில் குளப்பிட்டி தாவடி கோண்டாவில் இணுவில் மருதனார்மடம் ஆகிய பிரதேசங்களிலும் நண்பகல் 12மணிவரை ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டிருந்தது.

இதனால் கே.கே.எஸ் வீதியூடான போக்குவரத்து நண்பகல் 12மணிவரை துண்டிக்கப்பட்டிருந்தது. அத்துடன் வெளியிடங்களிலிருந்து மேற்படி பிரதேசங்களுக்குச் செல்ல முயன்றவர்கள் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் கடுமையாக விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டு திருப்பியனுப்பப்பட்டனர்.

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்த பிரதேசங்களில் படையினர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் சில பிரதேசங்களில் பொது மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர்.

மேலும் சிலருக்கு கொலை அச்சுறுத்தல்களையும் விடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.

திடீர் ஊரடங்கு காரணமாக இந்தப் பிரதேசங்களிலுள்ள பிரதேச செயலகங்கள் பாடசாலைகள் மற்றும் வங்கிகள் கூட்டுறவுக் கடைகள் தனியார் வர்த்தக நிலையங்கள் என்பனவும் இயங்கவில்லை.

நண்பகல் 12மணியுடன் ஊரடங்கு நீக்கப்பட்டபோதும் வீதிகள்  சனநடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டதுடன் ஆங்காங்கே சந்திகளில் படையினர் நின்றதுமட்டுமல்லாது வீதிகளில் சென்றவர்களைச் சோதனை செய்ததையும் காணக்கூடியதாகவிருந்தது.

Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..