பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow மக்களைப் பாதுகாப்பதில் தோல்வியடைந்த நாடு சிறிலங்கா: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

மக்களைப் பாதுகாப்பதில் தோல்வியடைந்த நாடு சிறிலங்கா: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 18 September 2006
sized_un_human_rights_commission_geneva_210.jpg சட்டத்தின் ஆட்சியை நடைமுறைப்படுத்தவும் மக்களைப் பாதுகாக்கவும் சிறிலங்கா அரசாங்கம் தவறிவிட்டது என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பொறுப்பாளர் லூயிஸ் ஆர்பௌர் குற்றம்சாட்டியுள்ளார்.


ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தை இன்று திங்கட்கிழமை தொடங்கி வைத்து லூயிஸ் ஆர்பௌர் பேசியதாவது:

சிறிலங்காவில் நாளாந்தம் காணாமல் போவதும் கொல்லப்படுவதும் நடைபெற்று வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் 2 இலட்சத்துக்கு 40 ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இனப்பிரச்சனையில் பொதுமக்கள்தான் சிக்கியுள்ளனர்.

சிறிலங்கா அரசாங்கமானது மனித உரிமைகளை அதிகளவில் மீறுகிறது.

சட்டத்தின் ஆட்சியை நடைமுறைப்படுத்துவதில் அந்நாடு தோல்வியடைந்து விட்டது. அந்நாட்டின் அனைத்து மக்களுக்குமான பாதுகாப்பை அளிப்பதில் தோல்வியடைந்து விட்டது.

வழக்குகளில் விசாரணைகள் நடத்தப்படாமல் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் பாதிக்கப்பட்டோருக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களை சர்வதேச சமூகம் கண்காணிப்பது முதன்மையானதும் அவசரமானதுமாகும். இவை வெறும் யுத்த நிறுத்த மீறல்கள் மட்டும் அல்ல. சர்வதேச மனித உரிமைச் சட்டங்களையும் மீறுவதாகும்.

Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..