|
தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை நேரடியான படைத்துறை நடவடிக்கைகள் மூலமோ அல்லது நேர்மையான அரசியல் இராசதந்திரச் செயற்பாடுகள் மூலமாகவோ இல்லாதொழித்துவிட முடியாது என்பதை சிங்களதேசம் நன்கு உணர்ந்துள்ளது. படைத்துறை ரீதியான இவ்வகைச் செயற்பாடுகள் சிறிலங்கா படைத்தரப்பை ஒரு |தோற்கடிக்கப்பட்ட படை| என்ற நிலைக்கு மிக அண்மையில் கொண்டுவந்து விட்டபோது விழித்துக்கொண்ட பேரினவாதம் அரசியல், இராசதந்திரம் என்பவற்றின்மூலம் தமிழ்மக்களின் உரிமைப்போராட்டத்தை செயலிழக்கச்செய்ய முடியுமா என சிந்திக்கத் தலைப்பட்டது.
அதன் விளைவே இந்த ;|போர்நிறுத்த உடன்படிக்கையும்| அதனோடு இணைந்த |சமாதானச் செயற்பாடுகளும்| ஆகும். இங்கும் தமிழர் தரப்பின் காத்திரமான செயற்பாடுகள் மேலோங்கி நின்றதுடன் சர்வதேச அரசியல், இராசதந்திர மட்டங்களில் அவை பெருத்த செல்வாக்கையும் வரவேற்பையும் பெற்றன. அத்துடன் தமிழர் தரப்பின் போராட்ட நியாயப்பாட்டை சர்வதேச சமூகம் படிப்படியாக உணரவும் தொடங்கியது. இந்த யதார்த்த நிலை சிங்கள பேரினவாத அரசை பேரச்சத்திற்குள்ளாக்கியது. தமிழர் தரப்பிற்கெதிரான தமது படைத்துறை, அரசியல், இராசதந்திரச் செயற்பாடுகள் வெற்றிபெறப் போவதில்லை என்பதை உணர்ந்த சிறிலங்கா பேரினவாதம், தமிழர் தரப்புக்கெதிராக |நிழல் யுத்தம்| என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்தது. இதன்மூலம் தமிழர் தரப்பை வலிந்து போருக்கு இழுத்து யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக அவர்கள்மேல் குற்றம் சுமத்தி அதனை சர்வதேச சமூகத்தை நம்பச்செய்வதே அவர்களின் அடிப்படை நோக்கமாக உள்ளது. அத்துடன் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி தமிழர் சேனையின் தளபதிகளை வீரர்களை கொன்றொழிப்பது அவர்களது பேரவாவென்பது வெளிப்படை. மேலும் தேசப்பற்றாளர்களையும் பொதுமக்களையும் படுகொலை செய்து அதன்மூலம் மக்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வை தோற்று விப்பதும் இந்நடவடிக்கைகளின் மற்றுமோர் நோக்கமாகும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் ஒட்டுமொத்த தமிழர் சமுதாயத்தைப் பலவீனப்படுத்தி அவர்களின் நியாயபூர்வமான உரிமைப்போரை நசுக்கிவிட சிங்களப் பேரினவாதம் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. இந்த நிழல் யுத்தத்தில் சிறிலங்கா அரசால் பேணி வளர்க்கப்படும் தேசவிரோத ஆயுதக் குழுக்கள் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவுகளால் பயன்படுத்தப்பட்டு வருவது மிக வெளிப்படையான விடயமே. இத்தகையோரில் அநேகர் சிறிலங்காவின் படைத்துறை துணைப்படைப் பிரிவுகளில் இணைக்கப்பட்டு படைத்துறை வேதனம் பெற்று வருவது ஆதாரங்களுக்கு அப்பாற்பட்டதல்ல. குறிப்பாக சிறிலங்காவின் 9வது துணைப்படைப்பிரிவு (9 ளுடுNபு) பெரும்பாலும் |ராசிக்| குழுவினரை கொண்டிருந்தது என்பதும் அவர்களுக்கு சிறிலங்காவின் படைத்துறை நிலைகளும் வழங்கப்பட்டதுடன் (தற்கொடைத்தாக்குதலொன்றில் ராசிக் கொல்லப்பட்டபோது சிறிலங்கா அரசால் |லெப்டினன்ட்| நிலை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது) அவர்கள் கொல்லப்படும் சந்தர்ப்பங்களில் சிறிலங்கா தேசியக்கொடியால் போர்த்தப்பட்டு சிறிலங்கா படைத்துறை |மரியாதை| வழங்கப்பட்டமையும் நாம் அறிந்ததே. அதேபோல் ஈ.பி.டி.பி(நுPனுP) தேசவிரோதக் கும்பலும் சிறிலங்கா அரசால் துணைப்படைக் கட்டமைப்பொன்றுக்குள் வைத்து பேணப்படுவதுடன் இவர்களுக்கான வேதனம், ஆயுதம், வாகனம் என்பவை துணைப்படை என்ற வகையிலேயே வழங்கப்பட்டு வருகின்றன. இவை தவிர புளொட் (Pடுழுவுநு), ஈ.பி.ஆர்.எல்.எவ் (நுPசுடுகு) போன்ற குழுக்களும் தேசவிரோதச் செயற்பாடுககளில் சிறிலங்கா அரசால் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. மேலும் சிறிலங்கா அரசு மோகன்குழு, வரதன் குழு, நிதிகுழு, அவர்குழு இவர்குழு என்று பல்வேறுபட்ட துரோகக் குழுக்களை உருவாக்கி தமிழருக்கெதிரான நடவடிக்கைகளில் அவற்றை ஈடுபடுத்தி வந்தமை ஒன்றும் அறியாத விடயங்களல்ல. இத்தகைய குழுக்களைப் பயன்படுத்தி சிறிலங்கா பேரினவாத அரசுகள் தமிழ்மக்கள் மீது இழைத்த கொடுமைகள் மிகப் பயங்கரமானவை. அவ்வகையில் சிறிலங்கா அரசுதன் புலனாய்வுத்துறையைக் கொண்டு கருணாகுழு என்ற ஒன்றை உருவாக்கி தற்போது நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருவதும்இ இந்தியாவில் இருந்து நுNனுடுகு தேசவிரோதக் குழுவை இறக்குமதி செய்திருப்பதும் அண்மைக்கால நிகழ்வுகள். சிறிலங்கா புலனாய்வுத்துறையால் தேசவிரோத ஆயுதக் குழுக்களைப் பயன்படுத்தி போராளிகள் மீதும் மக்கள் மீதும் படுகொலைத் தாக்குதல்கள் தொடர்ந்தும் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு நடத்தப்படும் தாக்குதல்கள் படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலேயே படைமுகாம்களுக்கு அருகிலேயே இடம்பெற்று வருவதும் தாக்குதல் நடத்துபவர்கள் தாக்கிவிட்டு இராணுவ முகாம்களுக்குள் ஓடி ஒளிந்துகொள்வதும் இரகசியமான விடயங்கள் அல்ல. சிறிலங்கா படைத்துறை மற்றும் போர்நிறுத்த கண்காணிப்புக்குழு என்பவற்றின் வழித்துணையோடு 40இற்கு மேற்பட்ட போராளிகள் பயணித்த பேரூந்து மீது வெலிகந்த பகுதியில் வைத்து கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டமை ஒன்றும் தற்செயலான சம்பவமல்ல. இத்தகைய செயற்பாடுகள் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை கேள்விக்குள்ளாக்கி நிற்கின்றன எனவும், இவை தொடருமானால் சிறிலங்கா அரசு மிகமோசமான விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் எனவும் தொடர்ந்தும் பொறுமை காத்தபடி தமிழர் தரப்பு சுட்டிக்காட்டி வந்துள்ளது. மாறாக சிறிலங்கா அரசோ இத்தகைய நடவடிக்கைகளைத் தொடர்ந்துகொண்டு தமக்கும் இதற்கும் எதுவித சம்பந்தமும் இல்லையெனக் கூறி முழுப் பூசனிக்காயைச் சோற்றில் புதைக்கும் வேலையைத் தொடர்ந்தும் செய்துவருகிறது. சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள், அதற்கு தமிழர் தரப்பிடம் இருந்து வெளிப்படுத்தப்படும் உணர்வுகள், செயற்பாடுகள் இவற்றால் ஏற்படப் போகும் விரும்பத்தகாத விளைவுகள் என்பவற்றை கருத்தில் எடுத்த சர்வதேசசமூகம் அண்மையில் சிறிலங்கா அரசுக்கு அழுத்தமான எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தது. இவ் எச்சரிக்கையில் தமிழர் தரப்பிற்கெதிரான நிழல் யுத்தத்தை நிறுத்த சிறிலங்கா அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அத்துடன் ஆயுதக்குழுக்களிடம் உள்ள ஆயுதங்கள் களையப்படவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைந்த தலைமை நாடுகளான அமெரிக்கா, ஜப்பான், மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பவற்றிடம் இருந்துவந்த வழமைக்குமாறான எதிர்பாராத இந்த எச்சரிப்பு சிறிலங்கா அரசுக்கு பலத்ததோர் அடியாகும் என்பதில் ஐயமில்லை. இவவிடயம் சிறிலங்கா அரசின் ஏமாற்று வித்தைகளையும் பொய்யுரைகளையும் வஞ்சகத்தனங்களையும் இனியும் சர்வதேச சமூகம் நம்பத் தயாரில்லை என்ற உறுதியான செய்தியொன்றை சிறிலங்காவிற்கு இடித்துரைத்துள்ளது. இந்த எச்சரிக்கைக்கு அவசர அவசரமாகப் பதிலளித்த சிறிலங்காவின் ஜனாதிபதி தங்களிடம் எந்தவித துணைப்படைக் குழுக்களோ அல்லது ஆயுதக்குழுக்களோ இல்லை எனவும் அவற்றுக்குத் தாம் ஆதரவு வழங்குவதில்லை எனக் கூறியமை ஒரு தேசத்தின் தலைமைக்குரிய அடிப்படை தார்மீகத் தகைமைகூட சிறிலங்கா அரசுத் தலைவர்களிடம் ஒருபோதும் இருந்ததில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளது. இந்நிலையில் அண்மையில் ஊடகமொன்றிற்கு செவ்வி வழங்கிய சிறிலங்கா |சமாதான| செயலகப் பணிப்பாளர் கூறியிருந்த விடயம் கேலிக்கூத்தானது மட்டுமன்றி சமாதானம் தொடர்பான சிங்கள பேரினவாதத்தின் உண்மையான மனப்பாங்கையும் வெளிப்படுத்துவதாய் அமைந்துள்ளது. கருணா குழுவின் ஆயுதங்களைக்களைய அரசு ஒருபோதும் நடவடிக்கை எடுக்காது. ஆழமான காட்டுப் பகுதிக்குள் நடவடிக்கைகளை மேற்கொள்வது அரசாங்கத்திற்கு நெருக்கடியாக அமையும். கருணாகுழு என்பது ஒரு ஆயுதக் குழுவல்ல. போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு முன் அவ்வாறு இருக்கவில்லை. இங்கு திரு. ஜெயந்த தனபால கூற்றுப்படி கொழும்பு கொட்டாவை பகுதி ஆழமான காட்டுப்பகுதியாகிறது. பொலநறுவை மாவட்ட வெலிக்கந்தை பகுதியின் எல்லைக் கிராமங்கள் அடர்ந்த காடுகளாகிவிட்டன. இது பறவாயில்லை. |கருணாகுழு ஒரு ஆயுதக் குழுவல்ல| என்ற அவரின் கண்டுபிடிப்பும் அவற்கான அவரின் வியாக்கியானமும் அற்புதமானவை. சிறிலங்கா பேரினவாதிகளின் எண்ணப்பாடுகள் என்றும் மாறப்போவதில்லை என்பதற்கு இந்த சமாதான பணிப்பாளரின் சமகாலக் கூற்று தக்கதொரு எடுத்துக்காட்டாகும். எது எவ்வாறு இருப்பினும் சிறிலங்கா அரசு ஆரம்பித்துவைத்த நிழல் யுத்தம் அது எதிர்பார்த்ததற்கு மாறான விளைவுகளையே தந்து கொண்டிருப்பது வெளிப்படை. சிறிலங்கா அதன் நிழல் யுத்தத்தை நிறுத்திக் கொள்ளாதவரை, ஒட்டுப்படைகளை மடியில் கட்டிக் கொண்டு மல்லுக்கு நிற்கும்வரை சர்வதேச சமூகம் எதிர்பார்க்கும் சமாதானம் சாத்தியப்படக் கூடியதொன்றல்ல என்பதே யதார்த்தமாகும்.
நெருடல் இணையம்
|