|
எமது தேசியத் தலைவரின் உறுதியளிப்புடன்தான் யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது |
|
|
|
Monday, 18 September 2006 |
 எமது தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் உறுதியளிப்புடன்தான் யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
புதிய பேச்சுக்களுக்கு ஏதுவாக வன்முறைகளைக் கைவிடும் உறுதி மொழியை தேசியத்
தலைவர் அவர்கள் வழங்க வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம்
தெரிவித்திருந்தது.
இந்நிலையில் பி.பி.சி. செய்தி நிறுவனத்தின் சிங்கள சேவையான "சந்தேசியா"
வுக்கு நேர்காணல் அளித்த இளந்திரையன் இதற்கான பதிலைத் தெரிவித்துள்ளார்.
இளந்திரையன் அளித்த நேர்காணலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறிலங்கா அரச தலைவராக மகிந்த ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டது முதலே
பேச்சுக்களை நடத்துவதற்கான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தும் சந்தர்ப்பங்கள்
வழங்கப்பட்டுள்ளன.
ஜெனீவாவில் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் சரத்துக்களைக்கூட மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நிறைவேற்றவில்லை.
நவம்பர் மாதத்தில் மகிந்த ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டது முதல் நாம் தற்காப்பு தாக்குதல்களையே மேற்கொண்டு வருகிறோம்.
எமது தேசியத் தலைவரின் உறுதி வழங்கலுடன்தான் சிறிலங்கா அரசாங்கத்துடன்
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டோம். ஆகையால் எமது தரப்பு
உறுதியானது ஏற்கனவே சிறிலங்கா அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்
இளந்திரையன்.
|