|
மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவ முன்நகர்வு முயற்சியை முறியடித்தனர் புலிகள் |
|
|
|
Tuesday, 19 September 2006 |

மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் பிரதேசத்தை நோக்கி சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட முனநகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதுள்ளது.
மட்டக்களப்பு செங்கலடி கறுத்தப்பாலம் பகுதியிலிருந்து பதுளை வீதியூடாக
நேற்று திங்கட்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் இம்முன்நகர்வு முயற்சி
மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் தற்காப்புத் தாக்குதலை மேற்கொண்டனர்.
இருதரப்பினரிடையே ரொக்கெட் வீச்சு அதிகாலை 4.30 மணிவரை நீடித்தது.
இதையடுத்து சிறிலங்கா இராணுவத்தினர் தமது நிலைகளுக்குப் பின்வாங்கினர்.
சிறிலங்கா இராணுவத்தினர் ரொக்கெட் தாக்குதல்களினால் விடுதலைப் புலிகளின்
பிரதேச கிராமங்களான கரடியனாறு, இலுப்படிச்சேனை, பன்குடாவெளி ஆகிய
கிராமங்களில் கடும் சேதம் ஏற்பட்டன.
உறங்கிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான
பொதுமக்கள் அந்த அதிகாலை வேளையில் அகதிகளாக பாதுகாப்பான இடங்களுக்குச்
செல்ல நேரிட்டது.
மட்டக்களப்பு நகரிலிருந்து வடக்குப் பகுதியில் 15 கிலோ மீற்றர் தொலைவில் செங்கலடி உள்ளது.
|