|
அம்பாறை படுகொலைக்கு அதிரடிப்படையே காரணம்: டெய்லி மிரர் |
|
|
|
Tuesday, 19 September 2006 |

அம்பாறை படுகொலைச் சம்பவத்துக்கு சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படைதான் காரணம் என்று அப்பகுதி மக்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஆங்கில ஏடான டெய்லி மிரர் குற்றம்சாட்டியுள்ளது.
இப்படுகொலை தொடர்பில் சிறிலங்கா இராணுவம் தெரிவித்த செய்திகளை மறுத்து டெய்லி மிரர் வெளியிட்டுள்ள தகவல்கள்:
அம்பாறை பனாமா சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை முகாமுக்கு அருகில்
இப்படுகொலைச் சம்பவம் நடந்துள்ளது. படுகொலை செய்யப்பட்டோர் அனைவரது
கண்களும் கைகளும் கட்டப்பட்டுள்ளன.
இராணுவத்தினர் முதலில் கூறியது போல் அது அடர்ந்த காட்டுப் பகுதி அல்ல.
மேலும் எமது புகைப்படக் கலைஞர் பொத்துவில் பகுதிக்கு நேற்று திங்கட்கிழமை
சென்று பார்வையிட்டார். அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இக்கொடூரப்
படுகொலையை சிறிலங்கா அதிரடிப்படையினர்தான் செய்தனர் என்றும் விடுதலைப்
புலிகள் அல்ல என்றும் வலியுறுத்திக் கூறுகின்றனர் என்று அச்செய்தியில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
|