|
படுகொலைக்கு புலிகள் காரணமில்லை |
|
|
|
Tuesday, 19 September 2006 |
|
சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்த ஐ.நா.விடம் முறைப்பாடு: ஹக்கீம்
அம்பாறை படுகொலைச் சம்பவத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் காரணமில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
படுகொலைச் சம்பவ இடத்துக்கு ரவூப் ஹக்கீம் நேற்று திங்கட்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.
அதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் ரவூப் ஹக்கீம் கூறியதாவது:
விடுதலைப் புலிகள் இதனைச் செய்திருப்பார்கள் என்ற முடிவுக்கு என்னால் வர
முடியாது. இந்தப் படுகொலையை விடுதலைப் புலிகள் செய்திருக்க மாட்டார்கள்
என்றுதான் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
படுகொலைச் சம்பவம் தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு
கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியை சந்தித்துப் பேச
உள்ளேன்.
இச்சந்திப்பின் போது சர்வதேச நாடுகளின் உதவியுடன் விசாரணைகளை நடத்துவதற்கு வேண்டுகோள் விடுக்கப்படும்.
படுகொலைச் சம்பவ நடந்த இடமானது முழுமையாக சிறிலங்கா இராணுவக்
கட்டுப்பாட்டுப் பிரதேசம். அங்கு விடுதலைப் புலிகள் உள்நுழைந்திருப்பதாகத்
தெரியவில்லை என்றார் ஹக்கீம்.
|