|
மட்டகளப்பில் விமானப்படையினர் தாக்குதல் |
|
|
|
Tuesday, 19 September 2006 |
|
மட்டக்களப்பில் விடுதலைப்புலிகள் இனங் காணப்பட்ட இலக்குகள் மீது இன்று செவ்வாய்க் கிழமை காலை முதல் ஸ்ரீலங்கா விமானப்படையினர் விமானத்தாக்குதலை நடத்துவதாக விமானப்ப்டைப் பேச்சாளார் தெரிவித்தார்.
எனினும் மட்டக்களப்பில் எப்பகுதிகளில் இத்தாக்குதல் நடத்தப்படுகின்றது என்றோ, சேத விபரம் பற்றியோ விமானத்தாக்குதல்கள் தொடர்வதால் தெரியவில்லை. மேலும் நேற்றைய தினமும் காலை ஸ்ரீலங்கா இராணுவத்தரப்பு மட்டக்களப்பு கறுத்தைப்பாலம் நோக்கி முன்னேற முயன்றுள்ளனர். இதன் போது விமானப் படையினர் வான் தாக்குதல நடத்தியுள்ளனர். எனினும் இத்தாக்குதல் விடுதலைபுலிகளால் முறியடிக்கப்பட்டு படையினரை பின்வாங்க வைத்துள்ளதாக விடுதலைப்புலிகள் தரப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நெருடல் இணையம்
|