|
யாழில் ஊரடங்குவேளைகளில் வியாபார நிலையங்களில் திருட்டு |
|
|
|
Tuesday, 19 September 2006 |
|
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் ஊரடங்குச் சட்டம் அமுலிலிருந்த வேளை நகைப் பட்டறைகள் மதுபானசாலை மற்றும் மினித் தியேட்டர் என்பன உடைக்கப்பட்டு திருட்டு இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் ராஜா தியேட்டருக்கு முன்னால் அமைந்துள்ள கடைத்தொகுதியிலுள்ள
கடைகளே நேற்று முன்தினம் இரவு உடைக்கப்பட்டு திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளன.
ஒரு கடையில் இருந்து மட்டும் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட தங்க மோதிரங்கள் மற்றும் பெருந்தொகைப் பணம் என்பன திருடப்பட்டுள்ளது.
மினி தியேட்டரில் இருந்த பொருட்கள் தூக்கி வீசப்பட்டு
சேதமாக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய கடைகளும் உடைத்து தேடுதல்
நடைபெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறிப்பிட்ட பகுதியில் அயலிலுள்ள வீடுகள் மீதும் கற்கள்
வீசப்பட்டதாகவும் தெரியவருகிறது.
ஊரடங்கு அமுல்
படுத்தப்பட்டிருந்தவேளையிலே இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதால்
நிச்சயமாக இது படையினரால் அல்லது அவர்களுடக் இயங்கும் துணை ஆயுதக்
குழுக்களால் நடத்தப்பட்டிருக்கலாமென மக்கள் தெரிவிக்கின்றனர்.
|