|
குடாநாட்டில் உள்ள பேக்கரிகளுக்கு உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை |
|
|
|
Tuesday, 19 September 2006 |
|
யாழ் அரச அதிபரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாண் உற்பத்தி செய்யாத பேக்கரிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் என யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம் மீண்டும் எச்சரித்துள்ளது.
குடாநாட்டிலுள்ள பேக்கரிகள் பாணை நிறை குறைத்து உற்பத்தி செய்வதாகவும்
தரமற்ற முறையில் தயாரிப்பதாகவும் அரச அதிபரால் பேக்கரி;களுக்குகென
விநியோகிக்கப்படும் மாவை சில பேக்கரிகள் வெளியாருக்கு விற்பதாகவும்
தெரிவிக்கப்படுவது குறித்துக் கேட்டபொழுது- யாழ் மாவட்ட பேக்கரி
உரிமையாளர் சங்கம் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
முறையற்ற
விதத்தில் செயற்படும் பேக்கரிகள் குறித்து மக்கள் விழிப்புடன்
இருக்கவேண்டும் இது குறித்து எமது சங்கத்திடமோ அல்லது அருகிலுள்ள பிரதேச
செயலகங்களுடனோ தகுந்த ஆதாரங்களுடன் முறையிட்டால் சம்மந்தப்பட்ட பேக்கரி
உரிமையாளர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படுமென பேக்கரி உரிமையாளர்
சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்மையில் மேற்படி விடையம்
தொடர்பாக யாழ் மாவட்ட நீதிபதி இ.த.விக்னராஜா யாழ் குடாநாட்டிலுள்ள
பேக்கரிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
|