|
2006 ஆம் ஆண்டில் சிறிலங்கா இராணுவமே பாரிய வன்முறைகளில் ஈடுபட்டது |
|
|
|
Tuesday, 19 September 2006 |
|
- சர்வதேச மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு
இலங்கையில் 2006 ஆம் ஆண்டில் சிறிலங்கா இராணுவமே பாரிய வன்முறைகளில் ஈடுபட்டது என்றும் தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த படுகொலைகள், காணாமல் போதல்களுக்கு இராணுவமே பொறுப்பு என்றும் சர்வதேச மனித உரிமைகள் ஆணையமாக Human Rights Watch குற்றம்சாட்டியுள்ளது.
இலங்கையில் பொதுமக்கள் பாதுகாப்பை மேம்படுத்துதலும் இது தொடர்பில்
சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமான
பரிந்துரைகள் என்ற தலைப்பில் 60 பக்க அளவிலான ஆய்வறிக்கை அந்த அமைப்பினால்
வெளியிடப்பட்டுள்ளது.
அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
- முல்லைத்தீவில் சிறிலங்கா விமானம் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்திய
இடமானது தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ இலக்கு அல்ல என்பது ஆதாரங்கள்
மூலம் வெளிப்பட்டுள்ளது.- சிறிலங்கா இராணுவ கட்டுப்பாட்டுப்
பகுதியில் சர்வதேச நிறுவனமான அக்சன் பார்ம் நிறுவனத்தின் பணியாளர்கள் 17
பேர் ஓகஸ்ட் மாதம் படுகொலை செய்யப்பட்டமைக்கு இராணுவத்தினர் மீது
குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் காணாமல் போதல்
சம்பவங்களுக்கும் சிறிலங்கா இராணுவத்தினரே பொறுப்பு என்று நம்பப்படுகிறது.
- அனுராதபுரம் கிளைமோர் தாக்குதல் சம்பவத்துக்கு விடுதலைப் புலிகள்தான் பொறுப்பு என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.-
திருகோணமலையில் தமிழ் மக்களின் வீடுகளும் கடைகளும் சூறையாடப்பட்டு
எரிக்கப்பட்ட போது இரு மணித்தியாலங்களாக அதனை சிறிலங்கா இராணுவத்தினர்
பார்த்துக்கொண்டே இருந்துள்ளனர்.
- பொதுமக்களுக்கு "ஊர்க்காவல் படை" என்ற பெயரில் சிறிலங்கா இராணுவம் பயிற்சி அளிக்கின்றனர்.-
தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது கட்டுப்பாட்டுப் பகுதியில்
பெருந்தொகையான மக்களுக்கு குடிசார் தற்காப்பு மற்றும் இராணுவப் பயிற்சி
அளிக்கின்றனர். சிறார் படைச்சேர்ப்பும் நிகழ்கிறது.
- சிறிலங்கா
இராணுவத்தினருடன் இணைந்து செயற்படும் கருணா குழுவினர் சிறார்களை கட்டாயமாக
படைகளில் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். கடந்த யூன் மாதம்
தொடக்கம் இக்குழுவினரால் 100-க்கும் மேற்பட்ட சிறார்கள் படைகளில்
கட்டாயமாக சேர்க்கப்பட்டுள்ளனர்.- வடக்கு கிழக்கில் மீண்டும்
பாரிய மோதல் ஏற்பட்ட நிலையில் பல நூற்றுக்கணக்கான மக்கள் படுகொலை
செய்யப்பட்டுள்ளனர். 2 இலட்சத்து 20 ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
அவர்கள் இப்போது மனிதாபிமான தேவைகளுக்காக போராடுகின்றனர். இருந்தபோதும்
இருதரப்பும் இதுவரை இம்மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் சென்றடைவது
தொடர்பில் எதுவித உறுதியையும் வழங்கவில்லை.
- மனிதாபிமானப் பணிகள்
சென்றடைவதில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தேவையற்ற முட்டுக்கட்டைகளை
விதிக்கின்றது. மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களை மீள் பதிவு
செய்ய வலியுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு ஒழுங்குமுறைகளால் அதிருப்தி
ஏற்பட்டுள்ளது.- யுத்த நிறுத்த ஒப்பந்தம் இருந்தாலும்
உத்தியோகபூர்வமாக சீர்குலைந்துள்ளது. மனித உரிமை முறைகேடுகள் பாரதூரமான
வகையில் அதிகரித்துள்ளன.
- 2006 ஆம் ஆண்டின் பாரிய வன்முறைச்
சம்பவங்களுக்கு சிறிலங்கா இராணுவத்தினரே பொறுப்பு. கடந்த சனவரியில்
திருகோணமலையில் 5 தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை, யாழில் மே மாதம்
ஆலயம் ஒன்றிலிருந்து 8 இளைஞர்கள் காணாமல் போனமை, யூன் மாதம் மன்னாரில்
ஐந்து தமிழ் மீனவர்களுக்கு மரண தண்டனை விதித்தமை ஆகியவை இராணுவத்தினரால்
நடத்தப்பட்டவையே.- கடந்த 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்த
காலம் தொடக்கம் 200-க்கும் மேற்பட்ட அரசியல் எதிரிகளை விடுதலைப் புலிகள்
இலக்கு வைத்துள்ளனர்.
- படுகொலைகள் தொடர்பில் சிறிலங்கா
அரசாங்கமானது தொடக்கத்தில் விசாரணைகளை மேற்கொள்ளத் தொடங்கினாலும் மிக, மிக
அரிதாகவே விசாரணைகளும் தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளன.
- சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் தற்போதைய பாரிய இராணுவ நடவடிக்கைகளால் பொதுமக்களைப் பாதுகாக்க தவறிவிட்டன.பரிந்துரைகளில் முக்கியமானவை:
- பொதுமக்களைப் பாதுகாப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்
ஆணையத்தின் கண்காணிப்புக் குழுவை சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப்
புலிகளும் ஒப்புக்கொள்ள வேண்டும்- மனிதாபிமானப் பணிகளுக்கு தேவையற்ற தடைகளை விதிப்பதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
- சர்வதேச விதிமுறைகளை மீறும் அனைத்து உயர் பதவி வகிக்கும் தளபதிகளையும் இராணுவத்தினரையும் இனங்காண வேண்டும்.-
அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் அதன் பணியாளர்களுக்கும் எதிரான
அச்சுறுத்தல்கள், சித்திரவதை மற்றும் வன்முறை ஆகியவை முடிவுக்கு கொண்டு
வரப்பட வேண்டும்
- இன மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர இனங்களை இணைத்து மேற்கொள்ளப்படும் வலையமைப்புப் பணிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை அந்த அமைப்பு அளித்துள்ளது.
|