பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow குடாநாட்டில் இருந்து மூன்றாவது கப்பல்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

குடாநாட்டில் இருந்து மூன்றாவது கப்பல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 19 September 2006
குடாநாட்டில் இருந்து மூன்றாவது முறையாக இன்றும் ஒரு கப்பல் சேவை பொதுமக்களின் ஒத்துழைப்புடன் படையினரால் நடத்தப்பட்டது. ஏற்;கனவே விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தில் இருந்து படையினரின் கப்பல் சேவையில் மக்கள் செல்வது பாதுகாப்பு இல்லையெனவும் இது மக்களை; பாதுகாப்பு கவசங்களாகப் பயன்படுத்தி இராணுவத்தினர் தமது பயணங்களை மேற் கொண்டு வருகின்றாhகள் எனவும் தெரிவித்திருந்தனர்;.

இதேவேளை இக்கப்பலிலும்; படையினரில் ஒரு தொகுதியினரும் தென்பகுதிக்கு பொது மக்களுடன் சேர்த்துக் கொண்டுசெல்லப்படவுள்ளனர்.

வெளிநாட்டுப் பிரஜைகளும் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளுக்கும் கல்வி நடவடிக்கைக்காக தென்பகுதி செல்பவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப் படுவதாக யாழ் எவ் எம் வானொலி மூலம் அறிவிக்கப்பட்டது.

இருந்தும் அதிகாலை 6மணி முதல் வெளிநாட்டுப் பிரஜைகளும் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளும் கல்வி நடவடிக்கைக்காக தென்பகுதி செல்பவர்களும் பெருமளவான  பொது மக்களும் பல்கலைக் கழக மாணவர்களும் அரசாங்க உத்தியோகஸ்தர்களும் 3000க்கும் மேல் திரண்டனர் இவர்கள் பகுதிபகுதியாகப் பிரிக்கப்பட்டு படையினரால் விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டு  பயணத்துக்காகப் பதியப்பட்டனர். பின்னர் 600பேர் தெரிந்தெடுக்கப்பட்டு கூட்டிச்செல்லப்பட்டனர்.

பல்கலைக்கழக மாணவர்களில் சுமார் 100பேர் வரை கப்பல் பயணத்துக்கு அனுமதிக்கப்பட்டனர் என்றும் விடுதி மாணவர்கள் 50பேர் வரை பயணத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏன்றும் இவர்களில் பெருமளவான யுவதிகளையே படையினர் தேர்ந்;தெடுத்து அழைத்துச் செல்வதாகவும் பல்கலைக்கழக மாணவர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்றமுறை போல் இம்முறையும் வரிசைகளில் நின்றும்- முண்டியடித்த மக்கள் கூட்டத்தினர் மீது படையினர் வன்முறைகளைக் கட்டவிழ்த்துள்ளனர்.

பல்கலைக் கழக மாணவர்கள் பலர் வயர்களாலும் கொட்டன்களாலும் தாக்கப்பட்டுள்ளனர். மேலும் படையினர் சிலர் கூட்டத்தை அடக்குவது போல் பல்கலைக் கழக மாணவிகள் மீது அங்கசேட்டைகள் பரிந்துள்ளதாக மாணவர்கள் சிலர் தெரிவித்தனர்.

 நண்பகல்12 மணியளவில் சுமார் 15க்கும் மேற்பட்ட இ.போ.ச பஸ்களில் 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காங்கேசன்துறைமுகத்துக்கு கூட்டிச்செல்லப்பட்டுள்ளனர்.
நாளை அதிகாலை இவர்கள் தென்பகுதிக்கு  கடற்படையின் கப்பலில் கூட்டிச்செல்லப்படவுள்ளதாக தெரியவருகிறது.

Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..