|
தாய்லாந்தில் இராணுவச் சதி ஆட்சி கவிழ்ந்தது. |
|
|
|
Wednesday, 20 September 2006 |
|
தாய்லாந்தில் இராணுவச் சதிப்புரட்சி மூலம் ஆட்சி மாற்றம் நடைபெற்றுள்ளது.நாட்டின் பாராளுமன்றம் இடை நிறுத்தப்பட்டுள்ளது.அரச காரியாலயங்கள் யாவும் மூடப்பட்டு, அரசியலமைப்பும் தடை செய்யப்பட்டுள்ளது. பிரதமர் தக்சின் தற்போது ஐ.நாவில் நடைபெறும் கூட்டத்திற்காக அமெரிக்காவில் நிற்கிறார். அவருடைய பேச்சாளர் தற்போதும் தமது கட்டுப்பாட்டிலேயே நாடு இருப்பதாகக் கூறுகிறார். இருப்பினும் இராணுவம் தற்காலிகமாக கேணல் சோன்ரி பூன்யாரற்கிலினை தற்காலிக பிரதமராக்கியுள்ளதாக கூறுகிறது.
சகல ஊடகங்களும் தமது கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறும் ஆட்சிக்கவிழ்ப்பாளர் இராணு வத்தை தளங்களுக்கு திரும்பும்படி கட்டளையிட்டுள்ளனர். நாடு முழுவதும் இராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பாங்கொக் நகரம் அமைதியாக உள்ளது. நகரைக் கட்டுப்படுத்த பெருந்தொகை இராணுவம் போய்க் கொண்டிருக்கிறது. பிரதமர் தக்சினின் கட்சி கடந்த ஏப்ரல் நடைபெற்ற தேர்தலில் 57 வீத வாக்குகளை பெற்றாலும் தேர்தலில் ஊழல் நடைபெற்றதாக எதிரணி கோரியிருந்தது. இவரை பதவி விலக வேண்டுமெனவும் பரவலாக பலர் கோரி வந்தனர். பெயர் தெரியாத தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஒருவர் தோன்றி தாய்லாந்து தொலைக்காட்சியில் பேசினார். நாட்டின் ஆட்சியை இராணுவம் பொறுப்பேற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
நெருடல் இணையம்
|