பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow கரவட்டி குருக்கள் சுட்டுக் கொலை
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

கரவட்டி குருக்கள் சுட்டுக் கொலை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 20 September 2006
கரணவாய் கரவட்டி குருக்கள் பாடசாலைக்கு அண்மையில் நேற்றுப் பிற்பகல் 2.15 மணிக்கு இனந்தெரியோதாரால் ஒருவர் சுடப்பட்டுள்ளார்.


அதேயிடத்தைச்சேர்ந்த ஆசிரியரான சிவானந்தம் சுப்பிரமணியம் (வயது32) என்பவரே படுகாயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக பருத்துத்துறை அரசினர் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

புpன்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.
இதேவேளை கைதடி தெற்குப் பகுதியிலும் இனந்தெரியாதோர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அதேயிடத்தைச்சேர்ந்த வி.எஸ் சுப்பிரமணியம் (வயது50) என்பவர் காயமடைந்தார்.

ஆவர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் வீட்டில் இருந்த சமயம் இனந்தெரியாதவர்களால் சுடப்பட்டதாகத் தெரியவருகிறது.

பிந்திக்கிடைத்த தகவலின்படி .இனந்தெரியாதோரால்; சுடப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட.கரணவாய் கரவட்டி ஆசிரியரான சிவானந்தம் சுப்பிரமணியம் (வயது32) இன்று சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளதாக தெரியவருகிறது. 

Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..