பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow மாமனிதர் மண்டேலாவுக்கு 'மனச்சாட்சியின் தூதுவர்' விருது
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

மாமனிதர் மண்டேலாவுக்கு 'மனச்சாட்சியின் தூதுவர்' விருது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 20 September 2006
sized_448_mandela.jpgசர்வதேச மன்னிப்புச் சபையின் அதி கௌரவ விருது தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டுக்கான ஹமனச்சாட்சியின் தூதுவர்' விருதை மாமனிதர் மண்டேலாவுக்கு (88 வயது) வழங்கப்பட்டிருக்கிறது.


இந்த விருதை தென்னாபிரிக்க எழுத்தாளரும் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றவருமான நதீன் கோடிமர் எதிர்வரும் நவம்பர் 1 இல் ஜோஹன்னர்ஸ் பேர்க்கில் வைத்து கையளிப்பார்.

பொது வாழ்வில் வேறு எவரிலும் பார்க்க நம்பிக்கைஇ கொள்கைப் பற்றுக்கு அடையாளமாக விளங்கும் உன்னத மனிதர் மண்டேலா என்று டப்ளினை தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச மன்னிப்புச் சபையின் ஸ்தாபகரான பில் சிப்பே தெரிவித்தார்.

1990 பெப்ரவரியில் சிறையிலிருந்து விடுதலையான பின் மண்டேலா உலகளாவிய பல லட்சோப லட்சம் மக்களுக்கு தனது தனிப்பட்ட மற்றும் அரசியல் தலைமைத்துவத்தின் மூலம் ஆகர்ச சக்தியாக விளங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..