பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow பேச்சுவார்த்தை மூலமே இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்- அமெரிக்கத் தூதுவர்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

பேச்சுவார்த்தை மூலமே இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்- அமெரிக்கத் தூதுவர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 20 September 2006

sized_america-thoothuvar.jpgஇலங்கையின் இனப்பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டுமென இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் றொபேட்ர்.ஓ.பிளேக் தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

 “ வன்முறைகளைக் கைவிட்டுவிட்டு விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு உடனடியாகத் திரும்ப வேண்டும், தமிழ் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றக் கூடிய அரசியல் தீர்வின் மூலமே இனப்பிரச்சினையை தீர்க்க முடியுமென அமெரிக்க திடமாக நம்புகிறது” என அவர் தெரிவித்தார்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக மாத்திரமே அமெரிக்கா, இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்குவதாக அங்கு குறிப்பிட்ட அமெரிக்கத் தூதுவர், இலங்கையின் அமைதி முயற்சியில் நோர்வேயின் செயற்பாடுகளுக்கு அமெரிக்கா பூரண ஆதரவு வழங்குமெனக் கூறினார்.

சமாதான முயற்சிகள் மற்றும் தேசிய ரீதியில் முக்கியமான விடயங்கள் குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் பொதுவான இணக்கப்பாடு என்றை எட்டுவதற்கு பேச்சுவார்;த்தைகளை ஆரம்பித்திருப்பது ஒரு ஆரோக்கியமான நடவடிக்கை எனவும், நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவர் றொபேட்ர்.ஓ.பிளேக் கூறினார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..