பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow இணைந்த வடக்கு, கிழக்கைப் பிரிப்பதற்கு இந்தியப் பிரதமர் எதிர்ப்பு
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

இணைந்த வடக்கு, கிழக்கைப் பிரிப்பதற்கு இந்தியப் பிரதமர் எதிர்ப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 20 September 2006
sized_1053.jpgஇலங்கையின் இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரிப்பதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்

அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கியூபா சென்றிருந்த மன்மோகன் சிங், அங்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இந்தச் சந்திப்பில் இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரிப்பதற்கு எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து தனது அதிருப்தியைத் தெரிவித்ததுடன், இலங்கத் தமிழர்களின் அபிலாசைகளில் ஒன்றாக வடக்கு, கிழக்கு மாகாணம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட வேண்டுமாயின் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தியே அதன்மூலம் வடக்கு, கிழக்கைப் பிரிக்க முடியுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கூறிய இந்தியப் பிரதமர், எனினும், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமாயின் அதற்கான சூழ்நிலை முதலில் ஏற்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியிருப்பதாக இந்திய இணையத்தளமொன்று செய்திவெளியிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வுகாண முடியுமெனவும் இந்தியப் பிரதமர் கூறியுள்ளார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..