பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow கருணா குழுவுடனான உறவை துண்டிக்கிறது ஈ.என்.டி.எல்.எவ்.
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

கருணா குழுவுடனான உறவை துண்டிக்கிறது ஈ.என்.டி.எல்.எவ். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 21 September 2006
கருணா அணியுடன் சேர்ந்து தாங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்படுத்திய "தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணி என்ற கூட்டு முன்னணியிலிருந்து தாங்கள் விலகுகின்றனர் என ஈழத் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் (ஈ.என்.டி.எல்.எவ்வினர்) அறிவித்திருக்கின்றனர்.


சென்னையை மையமாகக்கொண்டு இயங்கும் இந்த அமைப்பின் சார்பில் அதன் தலைவர் ஞா. ஞானசேகரன் நேற்று விடுத்த அறிக் கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

""அனைத்து அங்கத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் தெரியப்படுத்திக் கொள்வது என்ற தலைப்பில் அவர் விடுத்த பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
""எங்களது ஈழந் தேசிய ஜனநாயக முன்னணி (ஈ.என்.டி.எல்.எவ்.) இயக்கத்துக்கும், கருணாவால் ஏற்படுத்தப்பட்ட "ரி.எம்.வி.பி. இயக்கத்துக்குமிடையில் கடந்த 15-10-2004 அன்று ஏற்படுத்தப்பட்ட தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணி (ரி.ஐ.வி.எம்.) என்ற கூட்டு முன்னணி இன்றைய தினமான 20-09-2006 முதல் செயற்படமாட்டாது என்று அறிவிக்கப்படுகின்றது.

கருணாவின் இயக்கத்துக்கும், எங்களது இயக்கத்துக்குமான அனைத்துத் தொடர்புகளும் இன்று முதல் (20-09-2006) துண்டிக்கப்படுகின்றன.

ஈழத்திலும், வெளிநாடுகளிலும் எங்களது இயக்கத்தின் அங்கத்தினர் மற்றும் ஆதவாளர்கள் யாரும் கருணாவின் இயக்க அங்கத்தினர் எவருடனும் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். என்று உள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..