|
பளையில் விமானக் குண்டு வீச்சு- நாகர்கோவில் பகுதியில் மோதல் |
|
|
|
Thursday, 21 September 2006 |
|
யாழ். வடமராட்சி கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகளை நோக்கி சிறிலங்கா இராணுவத்தினர் ஆர்ட்டிலறி எறிகணை வீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
முன்னதாக இன்று வியாழக்கிழமை காலை சிறிலங்கா விமானப் படையின் கிபீர் ஜெட்
விமானங்கள் தென்மராட்சி பளை பிரதேசம் பச்சிலைப்பள்ளி கிராமத்தின் மீது 9
குண்டுகளை வீசியது.
இதில் பல வீடுகள் சேதமடைந்தன.
தொடர்ந்து நாகர்கோவில் பகுதியில் இருதரப்புக்கும் இடையே மோர்ட்டார் மற்றும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
விடுதலைப் புலிகளின் பிரதேசங்களை நோக்கி நேற்று புதன்கிழமை மாலை 5 மணி
முதல் இன்று வியாழக்கிழமை காலை 11 மணிவரை தொடர்ச்சியான தாக்குதல்களை
சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
முகமாலையில் செவ்வாய்க்கிழமை நடந்த மோதலில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 12 பேர் படுகாயமடைந்தனர்.
|