|
சம்பூரில் புத்தர் சிலை திறப்பு |
|
|
|
Thursday, 21 September 2006 |
 சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சம்பூரில் இன்று வியாழக்கிழமை புத்தர் சிலை திறக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் கூறியுள்ளதாவது:
தமிழர் தாயகம் முழுமையையும் சிங்கள தேசமாக்கும் நீண்டகாலத் திட்டத்தினை சிறிலங்கா அரசு நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ளது.
சம்பூர்ப் பகுதியை ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா இராணுவத்தினர் நாவலடிச்
சந்திப்பகுதியில் புத்தர் சிலை ஒன்றை அமைத்து இன்று திறந்து வைத்துள்ளனர்.
சிறிலங்கா இராணுவத்தினர் நீண்டகாலமாக தமிழர் தாயகத்தை சிங்கள மயமாக்கும் திட்டத்தினைக் கொண்டிருக்கின்றனர்.
அதற்கமையவே அப்பாவித் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைத் தாக்குதல்களை
சிங்கள இராணுவம் மேற்கொள்வதுடன், தமிழ்மக்களை அழித்தும், தமிழ் மக்களின்
சொத்துக்களை அபகரித்தும் வருகின்றன.
இத்தகைய இன அழிப்பு மற்றும் அடக்கு முறை நடவடிக்கைகளுக்கு வெகுவிரைவில் தீர்வு காணப்படும் என்றார் சி.எழிலன்.
|