பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow படையினரின் நான்காவது மனிதகேடய கப்பல் ஆரம்பமாகின்றது
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

படையினரின் நான்காவது மனிதகேடய கப்பல் ஆரம்பமாகின்றது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 21 September 2006

sized_balasingam-viduthi.jpgகுடாநாட்டிலிருந்து நான்காவது கப்பல் பயணத்துக்கான ஏற்பாடுகள் தற்போது படையினரால் செய்யப்பட்டுவருகின்றன.

வெளிநாட்டுக் கடவுச்சீட்டுடன் குடாநாட்டில் தங்கியிருப்பவர்களுக்கான பயணப் பதிவுகள் இன்று காலை 8மணிமுதல் யாழ் ஆஸ்பத்திரி வீதியிலுள்ள படையினரின் சிவில் நிர்வாகக் காரியாலயத்தில் மேற்கொள்ளப்பட்டன.


மேலும் குடாநாட்டிலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்லவுள்ள அரசாங்க உத்தியோகத்தர்களை நாளை வெள்ளிக்கிழமை காலை 8மணிக்கும் கல்வி நடவடிக்கைக்காக செல்லவுள்ள மாணவர்கள் குறிப்பாக புலமைப் பரிசுபெற்று வெளிநாடு செல்லவிருக்கும் மாணவர்களை நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 8மணிக்கும் யாழ் சிவில் நிர்வாகக் காரியாலயத்தில் பெயர்களைப் பதிவுசெய்து அடுத்துவரும் கப்பலுக்கான முன்னுரிமையைப் பெற்றுக்கொள்ளுமாறு யாழ் பாதுகாப்புத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை யாழ் பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் வெளிமாவட்ட மாணவர்கள் தமது பயணம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவிதமான அக்கறையும் எடுக்கவில்லை என்றும் பல்கலைக் கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கான பயண ஒழுங்குகள் எதுவும் இதுவரை செய்து தரப்படவில்லை என்றும் மாணவர்கள் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டது.

இவர்களுடைய குற்றச்சாட்டு தொடர்பாக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தொடர்புகொண்டபோது, விடுதி மாணவர்களின் பயண ஒழுங்கு தொடர்பாக தான் யாழ். அரச அதிபரூடாக பலாலி படைத்தளபதி சந்திரசிறியுடன் தொடர்புகொண்டதாகவும் இது தொடர்பான ஒழுங்குகளைப் படைத்தளபதி செய்து தருவதாக உறுதியளித்ததாகத் தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏற்கனவே விடுதிகளிலுள்ள 360 வெளிமாவட்ட மாணவர்களது பெயர் விபரங்கள் அரச அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அதில் ஒரு பிரதி யாழ் சிவில் நிர்வாகக் காரியாலயத்துக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தற்போது விடுதிகளில் தொற்றுநோய் அபாயம் ஏற்பட்டுவருகிறது. சுpல மாணவர்கள் தொற்று நோய் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில் விடுதி நிர்வாகத்தை நடத்துவதில் பல நடைமுறைச் சிக்கல்களை எதிர்நோக்கவேண்டியுள்ளது.

எனவே இந்தப் பிரச்சனைகள் தொடர்பாக யாழ் படைத் தளபதியுடன் கலந்துரையாடினேன்.

விடுதிமாணவர்களை பயணத்துக்கு அனுமதிப்பது தொடர்பாக முழு ஒத்துழைப்புத் தருவதாக அவர் உறுதியளித்ததுடன்- விடுதி மாணவர்களை சனிக்கிழமை காலை 8மணிக்கு யாழ் சிவில் நிர்வாகக் காரியாலயத்துக்கு முன்னால் வருமாறும் விடுதிகளிலுள்ள 360 வெளிமாவட்ட மாணவர்களது பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியலின்படி அவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்படும்.

balasingam-viduthi.jpg

புpன்னர் பிறிதொரு தினத்தில் கப்பல் பயணம் தொடர்பாக அறிவிக்கப்படும் நேரத்தில் அவர்கள் யாழ் சிவில் நிர்வாகக் காரியாலயத்துக்குச் சென்று அந்த டோக்கன்களைக் காட்டி பயணிக்கலாம் என்றும் படையதிகாரி தெரிவித்ததாக துணைவேந்தர் மேலும் தெரிவித்தார்.  

கப்பல் பயணப்பதிவுக்காக மாணவர்கள் இடம்பிடிக்கும் பொருட்டு விடுதிகளை விட்டுச்சென்று இரவு வேளைகளில் யாழ் சிவில் நிர்வாகக் காரியாலயத்துக்கு அருகிலுள்ள ஆலயங்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கி மறுநாள் அதிகாலையே பயணப்பதிவுக்காக முண்டியடித்து சனநெரிசலில் அகப்பட்டு பின்னர் பயணஅனுமதி கிடைக்காததால் மீண்டும் விடுதிகளுக்கு திரும்புவது குறித்து துணைவேந்தரிடம் கேட்டபோது- இந்தமுறை அவ்வாறான சூழ்நிலை எதுவும் ஏற்படாது.

ஏதிர்வரும் சனிக்கிழமை விடுதி மாணவர்கள் அனைவருக்கும் பயணஅனுமதிக்கான டோக்கன்கள் ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்ட பெயர்ப்பட்டியலின்படி பெயர்கள் அழைக்கப்பட்டு  வழங்கப்படும் என்று யாழ் படைத்தளபதி உறுதியளித்துள்ளதால் இரவு வேளைகளில் விடுதி மாணவர்கள் படையினரின் காரியாலயங்களுக்கும் முகாம்களுக்கும் அருகிலும் மற்றும் வேறிடங்களிலும் தங்குவதை தவிர்த்துக்கொள்ளவும் எனத்தெரிவித்தார்.  

விடுதி மாணவர்கள் அனைவருக்கும் பயணஅனுமதிக்கான டோக்கன்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டால் அடுத்தமுறை கப்பலில் செல்வதற்கு மாணவர்களின் பாதுகாப்பு நலன்கருதி விடுதிகளிலிருந்து அழைத்துச்செல்வதற்கு பஸ் பயண ஒழுங்குகள் ஏதும் செய்வீர்களா எனக் கேட்டபோது- இதுதொடர்பாக படைஅதிகாரிகளுடன் பின்னர் கலந்துரையாடுவதாக அவர் மேலும் தெரிவித்தார். 

விடுதிகளுக்கு வெளியே வசிக்கும் வெளிமாவட்ட மாணவர்களுடைய நலன்குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக துணைவேந்தரிடம் கேட்டபோது- வெளியே சுமார் 1000க்கும் மேற்பட்ட வெளிமாவட்ட மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சுமார் 200மாணவர்களே மிகவும் வறியநிலையில் எந்தவிதமான அடிப்படை வசதிகளுமின்றி இருக்கிறார்கள்.

இவர்கள் உட்பட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளியில் தங்கிப்படிக்கும் வெளிமாவட்ட மாணவர்களுக்கு 2ஆம் கட்டமாக அரிசி சீனி பருப்பு மற்றும் மா என்பன வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

ஏற்கனவே ஒரு வாரத்துக்கு முன்னர் வெளியில் தங்கிப்படிக்கும் வெளிமாவட்ட மாணவர்களுக்கு 100ரூபா பணமும் அத்தியாவசியப் பொருட்களான அரிசி சீனி பருப்பு மற்றும் மா என்பன பல்கலைக்கழக செலவில் வழங்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினார்.

இவர்களின் கப்பல் பயணஒழுங்கு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்துக் கேட்டபோது-
முதலில் விடுதி மாணவர்கள் செல்லட்டும். பின்னர் வெளியில் தங்கியுள்ள வெளிமாவட்ட மாணவர்களை அனுப்புவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தற்போது விடுதிகளிலுள்ள மாணவர்களை அனுப்பிய பின்னர் பாதுகாப்பு சூழ்நிலைகாரணமாக வெளியில் தங்கியுள்ள வெளிமாவட்ட மாணவர்களை விடுதிகளில் அனுமதிப்பது தொடர்பாக கருத்து எதனையும் இப்போது கூறமுடியாது எனத் தெரிவித்தார்.

இந்தக் கப்பல் பயணம் தொடர்பாக அரச அதிபரைத் தொடர்பு கொள்ளமுயற்சித்தபோதும் அவரது தொடர்பு கிடைக்கவில்லை.

யாழ் சிவில் நிர்வாகக் காரியாலயத்தினருடன் தொடர்புகொண்டபோது- இதுவரை தமக்கு எந்த அறிவித்தலும் வரவில்லை என்றும் பலாலி படைத் தலைமையகத்திலிருந்து வரும் அறிவுறுத்தலுக்கமையவே தாம் செயற்படுவதாகவும் தெரிவித்தனர்.

Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..