பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow குடாநாட்டில் பால் மா வகைகள் தட்டுப்பாடு – குழந்தைகள் அவதி
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

குடாநாட்டில் பால் மா வகைகள் தட்டுப்பாடு – குழந்தைகள் அவதி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 21 September 2006
குடாநாட்டில் குழந்தைகளுக்கான பால் மா வகைகள் உட்பட அனைத்து பால் மா வகைகளுக்கும் மிகப்பெரும் தட்டுப்பாடு நிலவுவதால் சிறுவர் முதல் பெரியோர் வரை பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.


தாய்ப்பால் அற்ற குழந்தைகளுக்கு இத்தகைய பால்மா வகைகளும் இன்மையால் போசாக்கு இன்மையால் கடுமையாக பாதிக்கப்படும் அபாயநிலை தோன்றியுள்ளது.

கடந்த வாரம் முதல் முன்னர் 160 ரூபாவரை விற்பனை செய்யப்பட்டு வந்த சில பால் மா வகைகள் 300ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வந்தன.

தற்போது அந்த விலைக்குக் கூட பெறமுடியாமல் இருக்கிறது.

இதேவேளை கால்நடைகளுக்கான தீவனங்களும் குடாநாட்டில் பெறமுடியாதநிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் தேவையான அளவு பசுப்பாலையும் பெறமுடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. பாலின் விலையும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

ஆத்தியாவசிய பால்மா வகைகளையும் குடாநாட்டுக்கு உடனடியாக தருவிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கேட்டுள்ளனர்.

Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..