புலி எதிர்ப்பு என்ற கொள்கையையும் வயிற்றுப்பிழைப்புக்காவும் மட்டும் ஆதாரமாக வைத்து புது கட்சி என்று தொடங்கினார்கள். இவர்களுடைய புதுக்கட்சி 19 மாதத்தில் புஸ்வாணமாகியுள்ளதாக பரந்தன் ராஜன் அறிவித்துள்ளார். எனினும் இதனை ஒரு திட்டமிட்ட உள்நோக்கம் உடைய திட்டத்துடன் இந்த அறிக்கை வெளிவந்துள்ளதாக ஆய்வாளர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளார்கள். கருணா குழவினருக்குள் புலிகள் பலமாக ஊடுருவி உள்ளார்கள் என்பதும்; புலிகள் ஈ.என்.டி.எல்.எவ் என்ற பெயருடன் கருணா குழவினர் ஊடாக இந்தியாவிற்குள் நிலை எடுத்துவிடுவார்கள் என்பது ஆய்வாளர்கள் பலருடைய கருத்து.
எனினும் ஈ.என்.டி.எல் எவ் இன் கடந்த கால வரலாற்றில் இத்தகைய அறிக்கைகள் எதுவும் புதியவை அல்ல. 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புளொட் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற பரந்த ராஜனுக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பில் இருந்த பிரிந்து சென்ற டக்ளஸ் தேவானந்தாவிற்கும் வேறு இயக்கங்களில் இருந்து பிரிந்து சென்றவர்களுக்கும் இடையே மலர்ந்த காதல்தான் ஈ.என்.டி.எல்.எவ் என்ற இயக்கத்தின் தோற்றமாக இருந்தது..
இவர்கள் ஈ.என்.டி.எல்.எவ் உருவாக்கிய பின்னர் தாமே உண்மையான புளொட் என்று 1987ம் ஆண்டு டக்ளஸ் தேவானந்தா அறிக்கை விட்டிருந்தார்.
இன்று திலீபனின் நினைவு தினம் தாயகம் எங்கும் கடைப்பிடித்துக்கொண்டு இருக்கப்படுகின்றது. 1987ம் ஆண்டு தியாகி திலீபன் உண்ணாநோன்பு இருந்த போது ஈ.என்.டி.எல். அமைப்பின் அன்றயை பொதுச் செயலாளராக இருந்த டக்ளஸ் தேவானந்தா தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனுக்கு எழுதிய கடிதத்தில் தியாகி திலீபனை போற்றியும் தமிழீழ தேசியத் தலைவரின் இந்த செயலை போற்றியும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கைதான் ஈ.என்.டி.எல்.எவிற்குள் இருந்த டக்ளஸ் தோவானந்தாவின் இறுதி அறிக்கையாக இருந்தது. பின்னர் ஏற்பட்ட உள்மோதலை தொடர்ந்து பரந்தன் ராஜன் தலைமையிலான குழவினர் இந்தியாவில் இருந்து இலங்கை வந்தனர். தாமே ஈ.என்.டி.எல்.எவ் என்று இந்திய இராணுவத்தினருடன் இணைந்து செயற்பட்டனர். இதே நேரம் ஈஸ்வரன் என்பவர் தாமே உண்மையான ஈ.என்.டி.எல்.எவ் என்று அறிக்கை விட்டிருந்தார். ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பை பரந்தன் ராஜன் தனதாக்கிகொள்ள இறுதியில் மாற்ற இயக்கங்களும் விடுதலைப் புலிகளுடன் இணைந்த காலத்தில் பரந்தன் ராஜன் ஈ.என்.டி.எல்.எவ் இயக்கத்தையும் விடுதலைப் புலிகளுடன் இனைக்க விரும்பவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதக வே.பிரபாகரனுக்கு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் எமது அமைப்பு உங்களுடன் சேர விரும்புவதாகவும் தெரியபடுத்தினார்.
இப்பொழுது இறுதியாக ஒருவருடனும் சேருவதற்கு வழி இல்லாமல் கருணா குழுவுடன் சேருவதாக அறிவித்து அறிக்கைவிட்டு அரசியல் கட்சி இராணவ பிரிவு என்ற எல்லாம் அறிக்கைகளை விட்டு மீண்டும் நாம் பிரிகிறோம் என்று பரந்தன் ராஜன் அறிவித்துள்ளார்.
தற்போது தமிழீழம் என்ற கொள்கையை கைவிட்டு ஈ.என்.டி.எல்.எவ் கருணா குழுவின் கூட்டில் உருவாக்கிய இலட்சணையுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற பெயரில் தமது அமைப்பு இயங்கும் என்று கருணா குழு அறிவித்திருக்கிறார்கள் பிள்ளையான் மார்க்கன் போன்ற இராஜதந்திர அரசியல் நிபுணர்களின் ஆலோசனைப்படி ஈழம் என்ற பதம் நீக்கப்பட்டுள்ளது.
கருணாவை ஜனநாயக வழிக்கு அழைத்துவருவதாக கூறி கருணாவின் குருவாக விளங்கிய டக்ளஸ் தேவானந்தாவும் தனது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பெயரை மாற்றி ஈழம் என்ற சொல்லை அகற்ற உள்ளதாக அறியமுடிகிறது.
மொத்தத்தில் இன்னும் சில காலத்தில் கருணா குழுவில் இருந்தும் சிலர் விலகி தாம்தாம் உண்மையான கருணா குழு என்று அறிவிக்கும் காலம் உருவாகலாம்.
ஆகவே இவர்களின் அறிக்கைகளும் விராப்பு வசனங்களும் பலகாலமாக கேட்டவிடயங்களே தவிர வேறு எதும் இல்லை.
சரி ஈ.என்.டி.எல் எவ் அமைப்பின் உறுப்பினர்களோ ஆதரவாளர்களோ கருணா குழுவுடன் தொடர்புகளை வைத்திருக்க கூடாது என்பதை அதன் தலைவர் அறிவித்துள்ளார் அப்படியானால்? லண்டனில் உள்ள தீபன் அல்லது றூபன் எந்த இயக்கம் என்றும் சிறைக்குள் இருக்கும் ராமராஜன் எந்த இயக்கம் என்றும் வானொலியில் அண்மையில் இனைந்தகொண்ட ஒருவர் தான் புலி தான் ஜனநாயக புலி ஆதரவாளன் உறுப்பினன் என்றும் தான் அன்றும் புலி இன்றும் புலி என்று கூறியுள்ளார் அவர் எந்த இயக்கம் இவர்கள் கருணாவை ஆதரித்தால் அல்லது ஆதரித்து கருத்து கூற ஈ.என்.டி.எல்.எவ் தலைவர் பரந்தன் ராஜன் அனுமதிப்பாரா?
அல்லது பிரதேசவாதத்திற்கு துணைபோகும் வானொலியும் அதன் உருமையாளனான ராமராஜன் தொடர்ந்தும் தனது மட்டக்களப்பு பிரதேசவாதத்தை பரப்பி கொண்டிருக்க பரந்தன் ராஜன் அனுமதிப்பாரா,? அல்லது வானொலிக்கும் ஈ.என்.டி.எல்.எவ் சார்வதேச பொறப்பாளர் ராமராஜனுக்கும் வானொலிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அறிவிப்பாரா?
மொத்தத்தில் பரந்தன்ராஜன் பரந்தன் பக்கமும் ராமராஜன் தனது பக்கமும் போக மாற்றுக் கருத்தக்கள் என்ற புலி எதிர்ப்பு வாதத்தை மட்டும் தன்தாக்கி செயற்பட்ட பல இயக்கங்களின் வராலாற்றுடன் ஈ.என்.டி.எல்.எவ் இயக்கத்தின் வரலாறும் இத்துடன் முடிவடைகிறதா?
இனி ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பு யாருடன் எதிர்காலத்தில் நிதந்தரமாக இனைந்துகொள்ள போகிறார்கள் என்பதை காலம்தான் தீர்மானிக்கும்.
நன்றி. நிதர்சனம் .கொம்