|
சிறிலங்கா இராணுவத்தினர் 2 ஆயிரம் பேர் சம்பூரை ஆக்கிரமித்திருக்கலாம் ஆனால் அதனைத் தக்க வைக்க 20 ஆயிரம் இராணுவத்தினர் தேவைப்படுவர் என்று சிறிலங்காவின் ஓய்வுபெற்ற ஏர் மார்சல் ஒருவரை மேற்கோள்காட்டி "இந்துஸ்தான் ரைம்ஸ்" கட்டுரை வெளியிட்டுள்ளது.
அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 25 ஆண்டுகாலமாக தமிழ் கிளர்ச்சியாளர்களுடன் நீடித்து வரும் இராணுவ
ரீதியான யுத்தத்தால் சிறிலங்காவில் இருந்த அரசாங்கங்கள் அனைத்தும்
தெற்காசியாவிலேயே பாரிய அளவில் இராணுவ மயமாக்கப்பட்ட ஒருநாடாக சிறிலங்காவை
உருவாக்கி உள்ளன.
இந்த நிலைமைக்கு சிறிலங்கா அரசாங்கங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இரண்டு தரப்பினருமே நவீன ரக ஆயுதங்களை யுத்தத்தில் பாவிப்பதனை அதிகரித்து வருகின்றனர்.
சிறிலங்காவை பாரிய அளவிலான இராணுவ மயமாக்கியமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தன்மை ஒரு பாரிய காரணமாக பங்காற்றியுள்ளது.
இராணுவ பலத்தைப் பொறுத்தவரையில் தெற்காசிய பிராந்தியத்தில் இதர
கிளர்ச்சியாளர் குழுவினருடன் எப்போதுமே ஒப்பிடமுடியாத வளர்ச்சியில் தமிழீழ
விடுதலைப் புலிகள் உள்ளனர். அத்தகைய தளபாடங்களும் இராணுவ வலுவையும் தமிழீழ
விடுதலைப் புலிகள் பெற்றுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்தான சிறிலங்காவுக்கான ஆபத்தைப் போல் எந்த ஒரு நாட்டுக்கும் ஏற்பட்டது இல்லை.
2004 ஆம் ஆண்டு மும்பை அமைப்பான உத்திகள் தொடர்பிலான குழு வெளியிட்ட
அறிக்கையின்படி தெற்காசியாவில் இராணுவ மயமாக்கப்பட்ட பாரிய நாடாக
சிறிலங்கா உள்ளது. ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு 8 ஆயிரம் இராணுவத்தினர்
என்கிற விழுக்காடு சிறிலங்காவில் உள்ளது.
ஆனால் தெற்காசிய நாடுகளான பாகிஸ்தானில் 1 மில்லியன் மக்களுக்கு 4 ஆயிரம்
பேர்- நேபாளத்தில் 2,700- இந்தியாவில் 1,300- பங்களாதேசில் 1,000
இராணுவத்தினர் என்கிற விழுக்காடுதான் உள்ளது.
நாட்டினது ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் இராணுவச் செலவீனத்திலும்
சிறிலங்காதான் முதன்மை இடத்தில் உள்ளது. சிறிலங்காவில் இது 4.1
விழுக்காடு- பாகிஸ்தானில் 3.5- இந்தியா மற்றும் நேபாளத்தில் 2.5-
பங்களாதேசில் 1.5.
கொலம்பியா, மியான்மார், சியாரலியோன், சூடான், பிலிப்பைன்ஸ் மற்றும்
உகாண்டா போன்ற கிளர்ச்சி நடைபெறும் நாடுகளை ஒப்பிடுகையில் சிறிலங்காவின்
பாதுகாப்புச் செலவீனமே அதிகமாக உள்ளது என்றும் உத்திகள் தொடர்பிலான
குழுவின் தெரிவிக்கிறது.
சிறிலங்கா இராணுவமானது நல்ல வலுவுடன் உள்ளது என்று இந்திய இராணுவ அதிகாரி
ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தான் அவர்களது ஒரே
இலக்கு. 1 இலட்சத்து 50 ஆயிரம் இராணுவத்தினர் உள்ளனர். பல்குழல் உந்துகணை
காவிகள், நீண்ட தூரம் பாயக்கூடிய எறிகணைகள், மோர்ட்டார்கள், யுத்த
டாங்கிகள் என சிறிலங்கா இராணுவத்தால் பயன்படுத்தப்படுகின்றன.
சிறிலங்கா கடற்படையில் 20 ஆயிரம் பேர் உள்ளன. சிறிலங்காவின் கடற்படையினர்
23 எம்.எம். ஆயுதங்கள் பொருத்தப்பட்ட அதிவேக தாக்குதல் படகுகள்,
சுற்றுக்காவல் கடற்கலங்கள் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர்.
கிபீர் சூப்பர் சொனிக் யுத்த விமானங்கள், மிக்-23, எம்.ஐ. - 24, உலங்கு வானூர்திகள் ஆகியவை விமானப்படையிடம் உள்ளன.
சிறிலங்காவின் இராணுவச் செலவீனமானது ஆண்டுக்கு 700 மில்லியன் டொலராகும்.
இது 1 பில்லியனைத் தொடக்கூடும். விமானக் குண்டுகளும் ஆட்டிலறி எறிகணைகளும்
பெருந்தொகையான மதிப்பிலானவை.
"சம்பூரை 2 ஆயிரம் சிறிலங்கா இராணுவத்தினர் கைப்பற்றினர். ஆனால் அதனைத்
தக்க வைக்க 20 ஆயிரம் இராணுவத்தினர் தேவை" என்று ஓய்வு பெற்ற ஏர் மார்சல்
ஒருவர் இந்துஸ்தான் ரைம்ஸ்க்கு தெரிவித்தார்.
"தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத பலமானது மிக நவீனமானவை" என்றும் உத்திகள் தொடர்பிலான குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆயுதங்களுக்கான செலவீனங்களும் அதை பராமரிப்பதற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை விமானப் படையை விமான எதிர்ப்பு
தளபாடங்களையோ இயக்கவில்லை. ஆனால் 2 முதல் 5 இலகு ரக விமானங்கள், 1 அல்லது
2 விமானத் தளங்கள் இருப்பதாக கூறுகிறது.
ஆனால் தரைப்படையும் கடற்படையும் மிகவும் வலிமையானதாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருக்கிறது.
நீண்டதூரம் தாக்கக்கூடிய ஆட்டிலறிகளையும் பலவகையான மோர்ட்டார்களையும்
சிறிலங்கா இராணுவத்தினரிடமிருந்து கைப்பற்றியுள்ளனர். ஆனால் டாங்கிகள்
ஏதுமில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற் புலிகள் அவர்களது சொந்தத் தயாரிப்பான
ஆனால் அதிவேகமாக செல்லக் கூடிய கடற்கலங்களையும் டபுள் பேர்ரெல் 23
எம்.எம். துப்பாக்கிகளையும் ராடாரையும் பெற்றுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் கடற்படை படகுகள் 10 முதல் 45 கடல்மைல் தொலைவு
செல்லக்கூடியது. கடல்சார் வர்த்தகம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்குரிய பல
கடற்கலங்களை விடுதலைப் புலிகள் பெற்றுள்ளனர்.
ஆனால் சிறிலங்கா இராணுவத்தினரின் எண்ணிக்கையானது 1,50,000. ஆனால் விடுதலைப் புலிகள் 10 ஆயிரம் பேர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படையானது 2 ஆயிரம் பேரைக் கொண்டது. ஆனால் சிறிலங்கா கடற்படையானது 20 ஆயிரம் பேரைக் கொண்டது.
தமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுப்பினர்கள் மற்றும் இராணுவம் சார் நடவடிக்கைகளுக்கு ஆண்டுக்கு 8 மில்லியன் செலவிடுகின்றனர்.
ஆனால் 175 மில்லியன் டொலர் முதல் 385 மில்லியன் டொலர் வரையிலான ஆண்டு
வருமானம் இந்த அமைப்புக் கிடைக்கிறது என்றும் உறுப்பினர்கள் மற்றும்
புலனாய்வு அமைப்புக்கு குறிப்பிடத்தக்க அளவில் நிதி ஒதுக்கப்படுகிறது
என்று மும்பை அமைப்பான உத்திகள் தொடர்பிலான குழுவின் அறிக்கை கூறுகிறது.
போதைப் பொருட்கள் கடத்தல் மூலம் 100மில்லியன் டொலர் ஆண்டு வருமானம்
கிடைப்பதாக கூறப்பட்டாலும் இது தொடர்பான நேரடியான ஆதாரங்கள் ஏதுமில்லை.
அண்மைய யுத்தத்தில் சிறிலங்காவின் வான் வலிமைக்கு விடுதலைப் புலிகள் பதிலேதும் அளிக்கவில்லை.
கடற்புலிகள் தாக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும் சிறிலங்காவின்
கடல்சார் நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. ஆகையால் கடற்படைக்கான
ஆயுதக்கொள்வனவில் ஈடுபடுகின்றனர்.
சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் தங்களது இராணுவ பலத்தை அதிகரித்து வருகின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|