|
சம்பூர் ஆக்கிரமிப்பானது யுத்த நிறுத்த ஒப்பந்த மீறலே: கண்காணிப்புக்குழுவின் புதிய தலைவர் |
|
|
|
Friday, 22 September 2006 |
 சம்பூர் ஆக்கிரமிப்பானது யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல் என்பதை தாம் ஒப்புக்கொள்வதாக இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் புதிய தலைவர் லார்ஸ் ஜொஹான் ஷோல்வ்பெர்க் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாங்கேணி வழியாக இன்று வெள்ளிக்கிழமை வாகரை சென்றடைந்த
லார்ஸ் ஜொஹான் ஷோல்வ்பெர்க், திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர்
சி.எழிலனை சந்தித்து கலந்துரையாடினார்.
லார்ஸ் ஜொஹான் ஷோல்வ்பெர்க்கிடம் போர்நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த
சிறிலங்கா இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை பற்றி எழிலன்
விளக்கினார்.
மேலும் மக்களை இடம்பெயரச் செய்து அவர்கள் மீது அவலங்களை திணிக்கும் செயற்பாடு பற்றியும் எழிலன் எடுத்துக் கூறினார்.
மக்களின் நிலைமைகளை லார்ஸ் ஜொஹான் ஷோல்வ்பெர்க் ஏற்றுக்கொண்டார். சம்பூர்
ஆக்கிரமிப்பானது யுத்த நிறுத்த மீறல்தான் என்பதை தாம் ஒப்புக்கொள்வதாக
கூறிய அவர், மக்களின் நிலைமைகளை எழிலனுடன் நேரடியாகச் சென்று
பார்வையிட்டார்.
இதனிடையே ஐ.நாவின் அகதிகளுக்கான நிறுவனத்தின் சிறிலங்கா பிரதிநிதியும்
இன்று வாகரைக்கு சென்று எழிலனைச் சந்தித்து மக்களின் நிலைமைகள் பற்றி
கலந்துரையாடியுள்ளார்.
மழை தொடங்குமுன் மக்களுக்கான வதிவிடங்களை அமைத்துக்கொடுக்கவேண்டும் என்று அவரிடம் எழிலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
|