பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow கௌரவமான சமாதானத்துக்காக 6 தசாப்தங்களாக தமிழ் மக்கள் போராட்டம் : உலக சமாதான தினத்தையிட்டு புலிகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

கௌரவமான சமாதானத்துக்காக 6 தசாப்தங்களாக தமிழ் மக்கள் போராட்டம் : உலக சமாதான தினத்தையிட்டு புலிகள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 22 September 2006
sized_lttelogoஇலங்கைத்தீவில் நிலையானதும் கௌரவமானதுமான சமாதானத்திற்காக கடந்த ஆறு தசாப்தங்களாக தமிழ் மக்கள் போராடி வருவதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச சமாதான தினத்தையொட்டி விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

2006 ஆம் ஆண்டில் சர்வதேச சமாதான தினத்தில் உலகின் பெரும்பாலான மக்கள் சமாதானமும் கௌரவமும் நிலையானதுமான சமூகஇ அரசியல் மற்றும் பொருளாதார சுதந்திரத்தை அனுபவித்து வருகின்றனர்.

எனினும்இ கடந்த ஆறு தசாப்த காலமாக இலங்கைத் தீவின் வடக்குஇ கிழக்குப் பகுதிகளில் தமிழ் மக்களுக்கு இவை யாவும் மறுக்கப்பட்டுள்ளன.

காலனித்துவ ஆட்சியால் இலங்கையில் தங்கள் சுதந்திரத்தை பறிகொடுத்த தமிழர்கள் வடக்குஇ கிழக்கு பிரதேசத்தின் பூர்வீகக் குடிகளாவார்கள்.

காலனித்துவ ஆட்சியை தொடர்ந்து தமிழர்கள் தங்களது இழந்த சுதந்திரத்திற்காக கடந்த ஆறு தசாப்தங்களாக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தக் காலப்பகுதியில் இந்த சுதந்திரப் போராட்டத்தில் அவர்கள் மிகப்பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளனர்.

உயிரிழப்புகள்இ இடம்பெயர்வுகள்இ சொத்தழிவுகள்இ கல்விச் சீரழிவு மற்றும் பொருளாதார வளர்ச்சியின்மையென தமிழர்கள் பல்வேறு வகைகளிலும் இந்த இழப்புகளை சந்தித்துள்ளனர்.

கடந்த ஆறு தசாப்தகாலத்தில் இலங்கைப் படையினரின் மிக மோசமான நடவடிக்கைகளால் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இருபது இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தமது வீடு வாசல்களை இழந்து வடக்குஇ கிழக்கு மற்றும் ஏனைய பகுதிகளுக்கும் வேறு நாடுகளிலும் குடியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

தங்களது சொந்த நிலங்களை பறிகொடுத்து அகதிகளாக இருக்கும் இந்த மக்களில் மிகப் பெரும்பாலானோர் மிகக் கடுமையான வறுமையிலும் வாழ்விடம் இன்றியும் தவிக்கின்றனர்.

இலங்கை அரசின் மோசமான கொள்கைகளினால்இ கல்வியில் முதலிடம் வகித்த தமிழ் மக்கள் இன்று கல்வி நிலையில் படுமோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண பொதுநூலகம் அழிக்கப்பட்டது முதல் இன்று வரை வடக்குஇ கிழக்கில் 500 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் அழித்தொழிக்கப்பட்டதன் மூலம் தமிழர்களுக்கு இவ்வாறானதொரு அவலநிலை ஏற்பட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முன்னர் இந்த நிலைமை என்றால் போர் நிறுத்த காலத்தில் அரச படைகளால் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டதுடன் வீடு வாசல்கள் மற்றும் சொத்துகள் அழிக்கப்பட்டு வாழ்வு நிலை மறுக்கப்பட்டும் பாடசாலைகள் அழிக்கப்பட்டதன் மூலம் கல்விக்கான வாய்ப்புகளும் பெரும்பாலும் மறுக்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 11 ஆம் திகதி அல்லைப்பிட்டியில் 31 பொதுமக்கள் கொல்லப்பட்டதும் ஆகஸ்ட் 14 ஆம் திகதி முல்லைத்தீவில் 51 பாடசாலை மாணவிகள் கொல்லப்பட்டதும்இ ஆகஸ்ட் மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் திருகோணமலையில் இராணுவ நடவடிக்கைகளால் 97 பொதுமக்கள் கொல்லப்பட்டதும் இறுதியாக கடந்த 18 ஆம் திகதி அம்பாறையில் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டதும் இவற்றில் சிலவாகும்.

போர் நிறுத்த காலத்தில் படையினரால் சுமார் 1000 பொதுமக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தக் காலப்பகுதியில் இரண்டரை இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

கடந்த இரண்டு தசாப்த காலத்தில் வடக்குஇ கிழக்கில் காணாமல்போனோரின் எண்ணிக்கை மீண்டும் சர்வதேச மனித உரிமைகள் சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளும் இந்த பெரும் அழிவுகள் சர்வதேச சமூகத்தின் மனச்சாட்சியை அழுத்தியதால் இன்று ஈழத் தமிழர்கள் போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தைப் போன்று அண்மைக் காலங்களில தங்கள் சுதந்திரத்திற்காக மிகப்பெரும் விலை கொடுத்து போராடிய உலகின் பெருமளவான மக்கள் இன்று முழு சுதந்திரத்தையும் அனுபவிக்கின்றனர்.

இதற்கு எரித்திரியாஇ கிழக்கு திமோர் மற்றும் மொன்றிநீக்றோ போன்ற சில நாடுகள் அண்மைக்கால உதாரணங்களாகும்.

இந்த சர்வதேச சமாதான தினத்தில் தமிழ் மக்களும் நிரந்தரமானதும் கௌரவமானதுமான சமாதானமானத் தீர்வொன்றையே வேண்டி நிற்கின்றார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..