பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow ரவூப் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டுவந்த அதிரடிப்படையின் பாதுகாப்பு வாபஸ்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

ரவூப் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டுவந்த அதிரடிப்படையின் பாதுகாப்பு வாபஸ் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 22 September 2006
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப் படை பொலிஸாரின் பாதுகாப்பு இன்று வெள்ளிக்கிழமை முதல் விலக்கிக் கொள்ளப்படவுள்ளது.


இதற்கான மேல் மட்ட உத்தரவு நேற்று வியாழக்கிழமை வழங்கப்பட்டதாக அதிரடிப்படை பொலிஸார் தெரிவித்தனர்.

ரவூப் ஹக்கீமுக்கு விசேட அதிரடிப் படையினர் இதுவரைகாலமும் விசேட பாதுகாப்பு வழங்கி வந்தனரெனவும் அவர் அதிரடிப்படை பொலிஸாருடன் முறுகலில் ஈடுபட்டுள்ள நிலையில்இ தொடர்ந்தும் அவருக்கு தாங்கள் பாதுகாப்பு வழங்க முடியாதெனவும் தகவல் தந்த பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

இதன்படி இவருக்கு பாதுகாப்பு வழங்கி வந்த விசேட அதிரடிப் படையின் சார்ஜன்ட் ஒருவர் உட்பட ஆறு பொலிஸாரும் விலக்கிக் கொள்ளப்படுகின்றனர்.

இனிமேல் இவருக்கு சாதாரண பொலிஸாரின் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளைஇ பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் ரவூப் ஹக்கீமிற்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு உறுதியாக தெரிவித்துள்ளது.

பொத்துவில் பாணம கிராமத்தில் இடம்பெற்ற 10 முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை சம்பவத்தின் பின்னர் ரவூப் ஹக்கீமின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக நாட்டில் வதந்தியொன்று பரவியுள்ளது.

எனினும் கட்சி தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவருக்குரிய பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவிக்கிறது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..