|
இணைத் தலைமைகளின் அழைப்புக்கு புலிகளின் பதில் நேற்றுத் தெரிவிப்பு |
|
|
|
Saturday, 23 September 2006 |
 மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்புகளும் ஒக்டோபர் முற்பகுதியில் ஒஸ்லோவில் ஏற்பாடு செய்யப்படும் பேச்சு மேசைக்குச் செல்லவேண்டும் என்று கேட்டு இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமைகள் விடுத்திருக்கும் அழைப்புத் தொடர்பாக விடுதலைப் புலிகளின் பதில் நேற்று கிளிநொச்சியில் வைத்து நோர்வேத் தூதரிடம் தெரிவிக்கப்பட்டது.
இலங்கைக்கு உதவும் மாநாட்டில் இணைத் தலைமைகள் கடந்த 12ஆம் திகதி இலங்கை
நிலைவரம் குறித்து வெளியிட்ட அறிக்கை மற்றும் இணைத் தலைமைகள் கூட்டத்தில்
ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பாக விளக்குவதற்காக நேற்று கிளிநொச்சிக்குச்
சென்ற நோர்வேத் தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கரிடம் புலிகள் தரப்பின்
நிலைப்பாட்டை அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன்
எடுத்துரைத்தார் என்று புலிகளின் சமாதான செயலகம் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடு வப்பணியகத்தின் அரசியல்துறைப் பொறுப்
பாளர் தமிழ்ச்செல்வன், நோர்வேத் தூதர் ஹான்ஸ் பிரட்ஸ்கருடன் இருமணி நேரம்
பேச்சு நடத்தினார்.
சமாதானப் பேச்சுக்கான இணைத்தலைமை களின் அழைப்பு, வடக்கு கிழக்கில் குறிப்
பாக யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் ஆட்கடத்தல்கள், படுகொலைகள் ஆகிய
இரண்டு விடயங்கள் மட்டுமே நேற்றைய சந்திப்பில் பிரதானமாக ஆராயப்பட்டன
என்று புலிகளின் சமாதான செயலகம் தெரிவித்தது.
அத்துடன் மூடப்பட்டிருக்கும் ஏ9 நெடுஞ் சாலையை முகமாலையிலும்,
ஓமந்தையிலும் மீளத் திறந்து மக்களின் அவலங்களைக் களைய எடுக்கப்படவேண்டிய
நடவடிக்கைகள் குறித்தும் நோர்வேத் தூதர் தமிழ்ச்செல் வன் சந்திப்பில்
விவாதிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
பிரஸல்ஸ் கூட்டத்தில் சமாதானப் பேச் சுத் தொடர்பாக இணைத் தலைமைகள் விடுத்த
அழைப்பை புலிகள் தரப்பு சாதகமாகப் பரி சீலிக்க இணக்கம்
தெரிவித்திருப்பதாகவும் இதனைத் தமிழ்ச்செல்வன் நேற்று நோர் வேத் தூதரிடம்
நேரில் தெரிவித்தார் எனவும் விடுதலைப் புலிகளின் சமாதான செய லகத்தை
மேற்கோள்காட்டி "தமிழ் நெற்' இணையத் தளம் தெரிவித்தது.
நெருடல் இணையம்
|