பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow மஹிந்தவை அமெரிக்காவில் சந்திக்க மறுத்தார் சந்திரிகா
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

மஹிந்தவை அமெரிக்காவில் சந்திக்க மறுத்தார் சந்திரிகா அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 23 September 2006
sized_chandrika-mahinda-meetingஇலங்கைக்கும், நோர்வேக்குமான இரு தரப்பு உறவு மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் அமைதி முயற்சிகளில் நோர்வே நீடிக்க வேண்டும் என்றும் நோர்வேப் பிரதமரிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளமைக்கு ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜே.வி.பி. ஆகிய கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

இது குறித்து ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ஸ கூறியதாவது,

"நோர்வேயுடனான இரு தரப்பு உறவை வலுப்படுத்த வேண்டும் என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியிருப்பதன் மூலம் புலிகளின் இலக்கான ஈழத்தை அவர்கள் அடைவதற்கான பாதையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

நோர்வே நாட்டினருக்கும் "தமிழீழ கனவு' உண்டு. அமைதி முயற்சி களில் நோர்வே பங்கேற்க வேண்டும் என்று மஹிந்த ராஜபக்ஷ விரும் பினால் ரணில் விக்கரமசிங்கவின் பாதையை அவர் பின்பற்றுகிறார் என்பதுதான் அர்த்தம். அது மக்களால் கடுமையாக விமர்சிக்கப்படும்'' என்றார்.

ஜாதிக ஹெல உறுமயவின் அத்துரலிய ரத்தின தேரர் கூறியதாவது,
""நோர்வேயுடனான உறவு குறித்த பேச்சுக்கான காரணங்களை மஹிந்த ராஜபக்ஷ விளக்க வேண்டும்.

மஹிந்த சிந்தனையின்படி பேச்சுக்களுக்கு முன்பாக விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும்.  ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போடுவதற்கு நோர்வே அனுமதிக்காது.'' என்றார் அத்துரலிய ரத்தின தேரர்.

நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..