பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow உணவுப் பொருள்கள் கிடைக்குமா? இதுவே குடாநாட்டு மக்களின் ஏக்கம் ஐ.சி.ஆர்.சி அறிக்கையில் தெரிவிப்பு
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

உணவுப் பொருள்கள் கிடைக்குமா? இதுவே குடாநாட்டு மக்களின் ஏக்கம் ஐ.சி.ஆர்.சி அறிக்கையில் தெரிவிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 23 September 2006
sized_icrc_logoகடந்த ஓகஸ்ட் 11ஆம் திகதியிலிருந்து இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மோதல்கள் விட்டுவிட்டு நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. இதனால், உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ இரண்டு லட்சத்தை எட்டியுள்ளது.


இலங்கையிலுள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேசக் குழு செப்ரெம்பர் 21ஆம் திகதியிட்ட தனது அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளது.

ஓகஸ்ட், 11ஆம் திகதியிலிருந்து யாழ்.குடாநாட்டுக்கும் ஏனைய பகுதிகளுக்கும் இடையிலான தரைவழிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தாம் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் துன்பத்தை சகித்துக்கொண்டு வாழ்கிறார்கள்.

உணவுப் பொருள்கள் வழமை போல் ஒழுங்காக கிடைக்குமா என்பதே அவர்களின் கவலையாக இருக்கின்றது. அரசாங்கம் தொடர்ந்து உணவுப் பொருள்களையும் ஏனையவற்றையும் அனுப்பிக்கொண்டிருந்த போதும் நிலைமை இன்னமும் மனிதாபிமானக் கவலையை ஏற்படுத்துவதாகவே இருந்து வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ள அவ் அறிக்கையில் கடந்த காலங்களில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மேற்கொண்டு வந்துள்ள மனிதநேயப் பணிகள் பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..