|
கொழும்பில் பாரிய சோதனை நடவடிக்கை |
|
|
|
Sunday, 24 September 2006 |
|
கொழும்பு நகருக்குள் நுழையும் இடங்களில் பாரிய சோதனை நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டது.
வவுனியா-மதவாச்சி சோதனைச் சாவடியில் பெருந்தொகையான ஆயுதங்கள்
கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டது.
கொழும்பு நகருக்கும் நுழையும் இடங்களான இரண்டு களனி பாலங்கள், மட்டக்குளி,
மொறட்டுவ, மற்றும் பத்தரமுல்ல ஆகிய பகுதிகளில் நேற்று சனிக்கிழமை காலை
பாரிய சோதனை நடவடிக்கை நடத்தப்பட்டது.
கொழும்பில் வழமையாக மேற்கொள்ளப்படும் ஒரு சோதனை நடவடிக்கை இது என்று பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே வத்தளையில் 2 மைக்ரோ பிஸ்டல்கள் மற்றும் 50 தோட்டாக்கள் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளதாகவும் 9 தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்கள் கைது
செய்யப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
|