|
யாழ். மனித அவலங்களை வெளியிடுவதா?: ஐ.நா. நிறுவனங்கள் மீது சிறிலங்கா பாய்ச்சல் |
|
|
|
Sunday, 24 September 2006 |
|
யாழ்ப்பாண மனித அவலங்களை வெளியிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகள் திணைக்கள ஆணையாளர் எஸ்.டி.திவரத்ன இது தொடர்பில் கூறியுள்ளதாவது:
சிறிலங்காவில் மனித அவலம் ஏதும் இல்லை.
போதுமான உணவுப் பொருட்கள் உள்ளன.
இது தொடர்பில் எவரும் முறைப்பாடு செய்யவில்லை.
ஐக்கிய நாடுகள் சபையின்
நிறுவனங்கள் வெற்றுக் கூச்சல்தான் போட்டுவருகின்றனர் என்பது
வெளிப்படையானது.
அரசாங்கத்தை விமர்சனம் செய்வதை விட வேறு எதனையும் அவர்கள்
செய்தது இல்லை.
யாழ்ப்பாணத்துக்கு மொத்தம் 9 ஆயிரம் மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
|