|
விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்துமாறு சிறிலங்காவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல் |
|
|
|
Sunday, 24 September 2006 |
|
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கான உறுதியான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு சிறிலங்காவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
ஐ.நா. கூட்டத்துக்கு மகிந்தவுடன் சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார
அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்காவின் இராஜாங்க விவகாரங்களுக்கான செயலாளர்
கொண்டலீசா றைசை நேற்று சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின் போது, நோர்வே அனுசரணையுடனான அமைதிப் பேச்சுக்களை அமெரிக்கா
உறுதியாக ஆதரிப்பதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை
நடத்துவதற்கான உறுதியான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் மங்களவிடம்
கொண்டலீசா றைஸ் அறிவுறுத்தியுள்ளார்.
மூதூரில் பிரெஞ்சு நிறுவன பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமை
மற்றும் சிறிலங்காவில் அதிகரிக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும்
இச்சந்திப்பில் மங்கள சமரவீரவிடம் கொண்டலீசா றைஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
மூதூர் படுகொலை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச அளவிலான சுயாதீன
விசாரணைக் குழுவை நியமிக்க உள்ளதாக கொண்டலீசா றைசிடம் மங்கள சமரவீர
விளக்கம் அளித்துள்ளார். அதனை தான் வரவேற்பதாக கொண்டலீசா றைஸ்
பதிலளித்துள்ளார்.
|