பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow காத்திருப்புடன் குழந்தை பிறப்பு.. இறந்த தந்தையின் முகம் பார்க்க முடியாமை
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

காத்திருப்புடன் குழந்தை பிறப்பு.. இறந்த தந்தையின் முகம் பார்க்க முடியாமை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 24 September 2006
sized_tamil_people...வவுனியாவில் தவிப்புடன் வதைபடும் மக்களின் சோகம்
யாழிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற முயற்சிக்கும் நிலையில் யாழுக்குத் திரும்புவதற்காக 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வவுனியாவில் தவிப்புடன் காத்துள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தால் சோதனைச் சாவடிகள் மூடப்பட்டுவிட்டமையால் நாளாந்தம் வவுனியாவுக்குச் சென்றுவிட்டு யாழ்ப்பாணத்துக்கு திரும்ப வேண்டிய 2 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் வவுனியாவிலே சிக்கிக் கொண்டனர்.

இவர்களில் 50-க்கும் மேற்பட்ட பாடசாலை சிறார்கள் யாழில் உள்ள தங்களது பெற்றோரை பார்க்க முடியாமல் உள்ளனர்.

இது தொடர்பில் வவுனியாவின் கூடுதல் அரச செயலாளர் திருமதி பி.எஸ்.சார்லஸ் கூறியுள்ளதாவது:

ஓகஸ்ட் 13 ஆம் நாள் முதல் 700-க்கும் மேற்பட்ட பொதுச்சேவைகள் துறை பணியாளர்கள் யாழ்ப்பாணத்துக்கு திரும்ப முடியாதுள்ளனர். 150-க்கும் மேற்பட்ட மாணவர்களும் 83 நோயாளிகளும் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் செல்வதற்காக காத்திருக்கின்றனர்.

வெளிநாட்டிலிருந்து வந்த 10 பேர் யாழ்ப்பாணத்துக்கு திரும்ப வேண்டிய நிலையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது தேவாலயங்களிலும் ஆலயங்களிலும் இதர இடங்களிலும் உறவினர்கள்- நண்பர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.

வவுனியா பிரதேச செயலகத்துக்கு பெருந்தொகையான மக்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் அம்மக்களுக்கு உதவுவதற்கான போதிய நிதி இல்லாமல் உள்ளது.

சமைப்பதற்கான உணவுப் பொருட்கள் எதுவும் எடுத்து வராத நிலையில் அரச சார்பற்ற நிறுவனங்கள்தான் உதவி வருகின்றன. நாங்கள் கையறு நிலையில் உள்ளோம். எம்மால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்கிறோம். யாழ்ப்பாணத்தில் உள்ள குடும்பத்தினருடன் தொலைபேசியூடாக பேசுவதற்கும் கூட ஏற்பாடு செய்திருக்கிறோம் என்றார் அவர்.

கொழும்பில் விளையாட்டு நிகழ்வுக்காக தங்களது ஆசிரியர்களுடன் 50 பாடசாலை சிறார்கள் வந்திருந்தனர். அவர்கள் வவுனியாவில் சிக்கியுள்ளனர். 13 வயதுக்கும் குறைவான அம்மாணவர்கள் தற்போது வவுனியா பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ளனர்.

மற்றொரு மிகக் கொடுமையான சம்பவமாக ஒரு பெண் மற்றும் தாயின் கதை உள்ளது.

அந்தப் பிள்ளையின் தந்தையார் யாழில் இறந்துவிட்டார். ஆனால் யாழ்ப்பாணத்துக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. அவரது தந்தை அடக்கம் செய்யப்பட்டு விட்டார்.

தன் தந்தைக்கு கடைசி முத்தம் கொடுத்து பிரியாவிடை அளிக்கக் கூட முடியாத தன் நிலை குறித்து அந்த பெண் கதறிய காட்சி மிகக் கொடுமையானது.

கர்ப்பிணி பெண் ஒருவருக்கு வலி எடுக்க தவித்துக்கிடந்த மக்களுக்கு இடையே தன் குழந்தையைப் அப்பெண் பெற்றெடுத்துள்ளார். அவரது உறவினர்களோ குடும்ப நண்பர்களோ இப்போதும் அவர் அருகில் இல்லை.

முகமாலை பகுதியில் தொடர்ந்து நடைபெறும் மோதலால் அகதிகளாக தாங்கள் வவுனியாவிலேயே தங்க நேரிடுமோ என்ற அச்சம் தவித்து வரும் அந்த மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது.

Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..