|
தென் மாகாணத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வாடகை வீடுகள், விடுதிகள்இ ஹோட்டல்கள் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த வாகனங்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
பொலிஸார் 60 மோட்டார் சைக்கிள்களிலும், ஆறு விசேட வாகனங்களிலும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக நள்ளிரவு நேரங்களில் வீதிச் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
வேகமாக செல்லும் வாகனங்கள், மதுபோதையில் செல்லும் சாரதிகள் கண்டு பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.
முக்கிய வீதிகள் சந்திகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கதிர்காமத்துக்கு யாத்திரையாக வருபவர்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இருந்து தென் பிராந்தியத்துக்குள் வருகின்ற வாகனங்களும், அதில் பயணிப்போரும் விசாரிக்கப்படுகின்றனர்.
சந்தேகத்துக்கு இடமான பொருட்கள், பொதிகள் குறித்தும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
அவ்வாறான பொருட்களைக் கண்டால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்குப்
பகுதிக் காடுகளில் இருந்து விடுதலைப் புலிகள் இப் பகுதிக்குள்
ஊடுருவுவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர்
அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொலிஸாரின் இந்த நடவடிக்கைகளின்போது கஞ்சா கடத்துவோர் பலர் அகப்பட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
நெருடல் இணையம்
|