பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow படைத்தளபதிகள நேற்று யாழ். குடாநாட்டுக்கு வருகை பலாலியில் உயர் மட்டப்பாதுகாப்பு மாநாடு
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

படைத்தளபதிகள நேற்று யாழ். குடாநாட்டுக்கு வருகை பலாலியில் உயர் மட்டப்பாதுகாப்பு மாநாடு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 24 September 2006
sized_palaly-airportபாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைகளின் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக்குழுவினர் நேற்று யாழ். குடாநாட்டுக்கு விஜயம்செய்து, இங்குள்ள பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்தனர்.


எதிர்காலப் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்தும் விவாதித்தனர்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, பாதுகாப்புப் படை களின் பிரதம அதிகாரி ஏயார் மார்ஷல் டொனால்ட் பெரேரா, இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத்பொன்சேகா மற்றும் கடற் படைத்தளபதி, விமானப்படைத்தளபதி ஆகி யோரும் பாதுகாப்பு உயரதிகாரிகளும் அடங் கிய குழுவே யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தது.

palaly-airportஇந்தக் குழுவினர் பலாலியில் யாழ். படை களின் கட்டளைத்தலைமையகத்தில் மாநாடு ஒன்றை நடத்தினர்.

யாழ். மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள முப்படைகளினதும் கட்டளையிடும் அதிகாரிகள் இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

குடாநாட்டின் பாதுகாப்பு நிலைமை, பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மாநாட்டில் விரிவாக ஆராயப் பட்டதாக பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

யாழ். குடாநாட்டின் பாதுகாப்புத் தொடர் பான எதிர்காலத் திட்டங்கள் பற்றி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜ பக்ஷ களத் தளபதிகளுக்கு விளக்கமளித்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

முப்படைத் தளபதிகள் அடங்கிய இந்தக் குழுவினர் நேற்றுமுன்தினம் கிழக்குப் பகு திக்கு குறிப்பாக சம்பூர் பிரதேசத்திற்கு விஜ யம்செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..