|
கோப்பாயில் 3 இளைஞர்களை காணவில்லை |
|
|
|
Sunday, 24 September 2006 |
 கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்களைக் காணவில்லை என அவர்களது பெற்றோர்களால் யாழ். மனித உரிமை ஆணைக் குழு அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 20ஆம் திகதி மாலையிலிருந்து இவர்கள் காணாமற்போயுள்ளனர்.
கலைவாணி வீதி, கட்டப்பிராயைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான இராஜேந்திரா
பத்மநாதன் (வயது 21), அவரது சகோதரன் இராஜேந்திரா சுரேஸ்குமார் (18),
வி.எச்.லேன் இருபாலையைச் சேர்ந்த சாரதியான தர்மகுலசிங்கம் நிசாந்தன் (வயது
21) ஆகியோரையே காணவில்லை என யாழ். மனித உரிமை ஆணைக்குழுவினர்
தெரிவித்துள்ளனர்.
நெருடல் இணையம்
|