|
த.தே.கூ. பத்மநாபனின் பாதுகாவலரை சுட்டுப் படுகொலை செய்தது வெள்ளை வான் குழு |
|
|
|
Sunday, 24 September 2006 |
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.பத்மநாபனின் பாதுகாவலரை வெள்ளை வானில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர்.
கே.பத்மநாபனின் பாதுகாவலர் படுகொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து 100
மீற்றர் தொலைவில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் முகாம் அமைந்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசம் விநாயகபுரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக கே.பத்மநாபன்
தெரிவு செய்யப்பட்டது முதல் இரு பிள்ளைகளின் தந்தையான குஞ்சித்தம்பி
குவேந்திரன் (வயது 38) அவருக்கு பாதுகாவலராக இருந்து வந்தார்.
தனது சொந்த இருப்பிடமான தம்பிலுவிலிருந்து அக்கரைப்பற்றுக்கு சென்று
ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு தனது நண்பருடன் உந்துருளியில் சென்று
பேரூந்துக்காக காத்திருந்த போது முற்பகல் 10.40 மணியளவில் சுட்டுப்
படுகொலை செய்யப்பட்டார்.
படுகொலை செய்யப்பட்ட குவேந்திரன் உடல் அக்கரைப்பற்று மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அம்பாறை நகரத்திலிருந்து 27 கிலோ மீற்றர் தொலைவில் தென்கிழக்கில் அக்கரைப்பற்று உள்ளது.
|