பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow பசிக்கொடுமையால் அரிசியை பறித்து சென்ற குடும்பஸ்தர்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

பசிக்கொடுமையால் அரிசியை பறித்து சென்ற குடும்பஸ்தர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 24 September 2006
பசியின் கொடுமை தாங்காது குடும்பஸ்தர் ஒருவர் வீதியால் பெண்ணொருவர் வாங்கிச் சென்ற அரிசியை அபகரித்துக் கொண்டு ஓடிய பரிதாப சம்பவமொன்று யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;

நேற்றுமுன்தினம் பெண்ணொருவர் பையொன்றில் அரிசி வாங்கிக்கொண்டு மானிப்பாய் வீதியால் சென்றுள்ளார். அச்சமயம் வேகமாக வந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவர் அப்பெண்ணின் கையிலிருந்த அரிசியை பறித்துக்கொண்டு வேகமாக ஓடியுள்ளார்.

அரிசியை பறிகொடுத்த பெண் திருடன்,திருடன் எனக் கூச்சலிடவே பெண்ணிடம் இருந்து நகைகளை அபகரித்துக்கொண்டு திருடன் ஓடுவதாகக் கருதி அப்பகுதியில் நின்றிருந்த மக்கள் அந்தக் குடும்பஸ்தரைத் துரத்திப்பிடித்தனர்.

பசியின் கொடுமையால் ஓடக்கூட முடியாது நின்ற அக்குடும்பஸ்தர் தானும் மனைவி பிள்ளைகள் எவருமே நான்கு நாட்களாக சாப்பிடவில்லை எனவும் பசிக்கொடுமை தாங்கமுடியாததால் குழந்தைகள் பசியால் வாடுவதைப் பொறுக்க முடியாது தான் இவ்வாறு செய்ததாகவும் விம்மி அழுது கூறியுள்ளார்.

நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..