பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow யாழ் காங்கேசன்துறைத் துறைமுகத்தில் சிறிலங்காப் படையினருக்கு பொருட்கள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

யாழ் காங்கேசன்துறைத் துறைமுகத்தில் சிறிலங்காப் படையினருக்கு பொருட்கள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 24 September 2006

sized_kankesanthurai-slarmyயாழ்ப்பாணம் காங்கேசன்துறைத் துறைமுகத்தில் தரித்து நிற்க்கும்“றூகுனு மேஸ”கப்பலில் இருந்து படையினருக்காக பொருட்கள் இறக்கப்படுவதினால் பொது மகக்ளுக்கான பொருட்கள் இறக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நேற்று நண்பகல் முதல் படையினருக்கான பொருட்களை இறக்கும் பணி ஆரம்பமாகியமையால் கோண்டாவில் களஞ்சியத்திற்கு பொருட்கள் கொண்டுவர சென்ற பாரவூர்திகள் காத்திருந்து விட்டு ஊரடங்குச்சட்டம் காரணமாக வெறுமையாக களஞ்சியத்திற்கு திரும்பியுள்ளன.

பராவூர்திகளை இன்று நண்பகலுக்கு மேல் தெல்லிப்பளை பொருட்கள் இறக்கும் இடத்திற்கு சமூகம் அளிக்கும் படி படைத்தரப்பினர் நேற்று மாலை கூறி விட்டமைதத் தொடாந்து இன்று மிதிப் பொருட்களைப் பெற பாரவூர்திகள் சென்றுளளன.

இதே வேளை பொதுமக்களுக்கான பொருட்கள் கொண்டுவரப்பட்ட குறி;பி;ட்ட கப்பலில் சுமார் ஆயிரம் மெற்றிக் தொன் நிறையுடைய பொருட்கள் கடந்த இருபத்தி நாலு மணித்தியாலத்தில் படையினருக்காக இறக்கப்பட்டமையினால் நேற்றைய தினம் பொருட்கள் கோண்டாவில் களஞ்சியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவில்லையென பாரவுP+ர்தி சேவையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதேவேளை யாழ்ப்பாணத்திற்கு பல கப்பல்கள் வந்துள்ளதாக அரசாங்கமும் அரச அதிகாரிகளும் தெரிவிக்கின்ற போதிலும் யாழ் மாவட்ட மக்களின் பட்டினி இன்னும் நீங்கவில்லையென்பதே உண்மையான நிலமையாகும் கடந்த மாதம் 11 ம்திகதி முதல் யாழ் குடாநாட்டு மக்கள் பெரும் நெருக்கடிக்குள் உள்ளாகியுள்ளதுடன் பெரும் பட்டினியையும் எதிர்நோக்கியுள்ளார்கள்.

அரசாங்கம் பல கப்பல்களில் யாழ்ப்பாணத்திற்கு பொருட்கள் வந்ததாக தெரிவிக்கின்ற நிலையிலும் யாழ்ப்பாணத்தில் உணவுப் பொருட்களின் விலை மிகவும் உயர்ந்தே காணப்படுகின்றது.

குறிப்பாக சீனி 250 ரூபாவையும் அரிசி 100 ரூபாவையும் கடந்து சென்றள்ளது யாழ் மாவட்ட அதிகாரிகள் கட்டம் கட்டமாக கடந்த 45 நாட்களில் மூன்று கட்டமாக உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டதாக ஒரு மாயையை உருவாக்கி அறிக்கைகள வெளியிட்டு வருவதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள் 


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..