|
ஈழத்தமிழர்கள் தனிநாடு பெற்றிட கருணாநிதி துணைநிற்க வேண்டும் சிதம்பர மாநாட்டில் பழ.நெடுமாறன் உரை |
|
|
|
Tuesday, 26 September 2006 |
|
ஈழத்தமிழர்கள் தனிநாடு பெற தமிழக முதல்வர் கருணாநிதி துணைநின்று தனது வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என பழ.நெடுமாறன் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சி சார் பில் ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாடு சிதம் பரத்தில் கடந்த சனியன்று நடந்தது. கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப் பினர் கி.வெங்கட்ராமன் தலைமை வகித்தார். ஆ.சிவஞானம் வரவேற்றார். பழ.நெடுமாறன் சிறப்புரையாற்றினார்.
அவர் தனதுரையில் கூறியதாவது:
இலங்கை எம்.பிக்கள் குழுவை இந்தியப் பிரதமர் சந்திப்பதாக வாக்குறுதி அளித்தார். ஆனால், அதன்படி நடந்துகொள்ளவில்லை. தமிழக முதல்வர் அக்குழுவினரைச் சந்திக்க வில்லை. இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கள் கொண்ட குழுவை இலங்கைக்கு அனுப்பி உண்மை நிலையை அறியவேண்டும்.
இலங்கை போர் தற்போது சர்வதேச அங்கீ காரத்தை நோக்கி நகர்கிறது.
விடுதலைப் புலிகள் 70 வீதமான நிலத்தை மீட்டுவிட்டனர். மீதமுள்ள 30 வீத இடத்தை மீட்கும் நாள் அதிக தூரத்தில் இல்லை.
பெரியார் காங்கிரஸிலிருந்து விலகி தனது வரலாற்றுக் கடமையை நிறைவேற்றினார். காமராஜர் இரண்டு பிரதமர்களை உருவாக்கி வரலாற்றில் இடம்பிடித்தார். அதுபோல் தமிழக முதல்வரும் தனது வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றார். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், தமிழர் இயக்க பொதுச் செயலர் தியாகு தமிழ்த் தேச பொதுவுட மைக் கட்சி பொதுச்செயலர் பெ.மணியரசன் உள்ளிட்டோர் பேசினர்.
தமிழ்த் தேச பொதுவுடைமைக் கட்சி சார் பில் சிதம்பரம் மேலவீதியில் சனிக்கிழமை நடைபெற்ற ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாட் டில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் பங்கேற்றார்.
அழைப்பிதழில் அவரது பெயர் கிடையாது. மாநாடு சிதரம்பரத்தில் நடைபெறு வதை அறிந்து வந்து மாநாட்டில் பங்கேற்றார்.
நெருடல் இணையம்
|