பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow "தமிழ் தாயகத்தை பிரிக்க விரும்பும் குழுக்களுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உதவியளித்து வருகிறது"
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

"தமிழ் தாயகத்தை பிரிக்க விரும்பும் குழுக்களுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உதவியளித்து வருகிறது" அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 27 September 2006

sized_sivajilingam''இந்தியா தமிழரின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும்"
தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்றும், தமிழ் தாயகத்தை பிரிக்க விரும்பும் குழுக்களுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. ஆதரவு வழங்குவதாகவும் யாழ். மாவட்ட தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி என்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தெகல்றா இணையத்தளத்திற்கு இது தொடர்பாக விரிவான பேட்டியொன்றை அவர் வழங்கியுள்ளார்.

அப்பேட்டி விபரம்:

கேள்வி: இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு எந்த நிலையிலுள்ளது?


பதில்: இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவை ஓரங்கட்டச் செய்வதற்காக இலங்கையுடன் பாகிஸ்தான் எப்போதுமே சிறந்த நட்புறவையே பேணி வருகிறது. கடந்த பல வருடங்களாக இது தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இலங்கை என்றுமே இந்தியாவுக்கு விசுவாசமாக இருந்ததில்லை.

1971 இல் ஜே.வி.பி.யின் கிளர்ச்சியை அடக்குவதற்கு இந்தியாவின் உதவியை இலங்கை நாடியது. இதற்காக அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி விமானப்படை விமானங்களையும் ஹெலிகொப்டர்களையும் அனுப்பி அப்போதைய இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்கு உதவினார்.

எனினும்இ 1971 இல் இந்திய - பாகிஸ்தான் யுத்தம் வெடித்த போதுஇ இலங்கையில் பாகிஸ்தான் போர் விமானங்கள் எரிபொருளை நிரப்புவதற்கு இடமளித்ததன் மூலம் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே இலங்கை எடுத்தது.

1983 இல் ஈழத் தமிழருக்கெதிரான இனப் படுகொலையை அடுத்துஇ தமிழ் தலைவர்களுடனான சந்திப்பில் இலங்கை அரசுக்கெதிராக இந்திரா காந்தி கடுமையான உணர்வலைகளை வெளிப்படுத்தியிருந்தார்.

இலங்கை அரசு நன்றி மறந்து எப்போதுமே இந்தியாவுக்கு எதிராகவே செயற்பட்டு வந்துள்ளதாக தமிழ் தலைவர்களிடம் இந்திரா காந்தி தெரிவித்திருந்தார்.

கேள்வி: அண்மைக் காலங்களில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் எவ்வாறு இராணுவ ஒத்துழைப்பு அதிகரித்தது?

பதில்: 2000 ஆம் ஆண்டில் இலங்கைக்கு பாகிஸ்தான் மிகப் பெருமளவில் போர்த்தளபாடங்களை வழங்கியது. தென்மராட்சிப் பகுதியையே நாசமாக்கப் பயன்படுத்தப்பட்ட பல்குழல் ரொக்கட்டுகளை 2000 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்கியது.

2004 இல் இலங்கைக்கான தூதுவராக பஸீர் வலி முகமட் நியமிக்கப்பட்ட பின் இரு நாடுகளுக்குமிடையிலான இராணுவ ஒத்துழைப்பு வெகுவாக அதிகரித்தது. வலி முகமட்இ பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவின் (ஐ.எஸ்.ஐ.) முன்னாள் இயக்குனராவார்.

அமெரிக்காவால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டஇ பதுங்கு குழிகளை ஊடுருவித் தாக்கியழிக்கக் கூடிய குண்டுகள் (டீரமெநச- டீரடளவநச) உட்பட பெருமளவான நவீன போர்த் தளபாடங்களை இலங்கைக்கு பாகிஸ்தான் கடந்த இரு வருடங்களில் வழங்கியுள்ளது.

இலங்கை விமானப்படையை மிக நவீனமயப்படுத்தவும் பாகிஸ்தான் பெருமளவு உதவிகளைச் செய்துள்ளது. அண்மையில் கூட இரு கப்பல் தொகுதி ஆயுதங்களை இலங்கைக்கு பாகிஸ்தான் வழங்கியுள்ளது.

தற்போதைய பாகிஸ்தான் தூதுவர் ஏயார் வைஷ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) அஸ்லம் சௌத்ரிஇ குறிப்பாக விமானப்படைக்கான ஆலோசனை உட்பட இலங்கைப் படையினருக்கு மிக முக்கிய இராணுவ ஆலோசனைகளை வழங்கி வருகின்றார்.

பாகிஸ்தானின் இந்த இராணுவ உதவிகளானதுஇ இலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வொன்றை காண்பதை விடுத்து இராணுவத் தீர்வைக் காண்பதற்கு இலங்கையைப் பெரிதும் தூண்டியுள்ளது.

பாகிஸ்தானுக்கு இந்த வருட ஆரம்பத்தில் பயணம் செய்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷஇ பாகிஸ்தானுக்கு பத்து மில்லியன் டொலர் கடனுதவி வழங்குவதாக அறிவித்தார்.

இதுபற்றி அப்போது நான் பாராளுமன்றில் உரையாற்றுகையில் இ ஹதாய் பிச்சையெடுக்கையில் ஏழைகளுக்கு உதவி செய்வதற்காக மகன் காசிக்குச் சென்றானாம்' எனக் குறிப்பிட்டிருந்தேன்.

இவ்வாறான செயல்கள் மூலம் பாகிஸ்தானின் நன்மதிப்பைப் பெற முடியுமென இலங்கை அரசு கருதியிருந்தது. எனினும்இ இது இந்தியாவிடமிருந்து கடும் எதிர்ப்பைச் சம்பாதிக்குமென அவர்கள் உணரவில்லை.

தற்போது முன்னரை விட இந்தியா எம்மீது மிகவும் அனுதாபம் கொண்டுள்ளது.

கேள்வி: 2004 இல் இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராக பஸீர் வலி முகமட்டை நியமித்தபோதுஇ இந்தியாவில் கடுமையான விமர்சனம் எழுந்தது. அப்படியிருக்கையில்இ பாகிஸ்தான் இவரை ஏன் இலங்கைத் தூதுவராக நியமித்ததென நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: தென்னிந்தியாவில் துணைத் தூதரகமொன்றைத் திறப்பதற்கு பாகிஸ்தானுக்கு இன்றுவரை இந்தியா அனுமதி வழங்கவில்லை. தென்னிந்தியாவில் இது பயங்கரவாதத்தை தூண்டும் என்பதற்காகவே இந்தியா இதற்கான அனுமதியை வழங்கவில்லை.

ஆனால்இ தென்னிந்தியாவில் காஷ்மீர் போன்றதொரு பிரச்சினையை உருவாக்குவதற்காகஇ இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பாகிஸ்தான் சார்பு முஸ்லிம் பயங்கரவாதக் குழுக்களை உருவாக்குவதற்கு பாகிஸ்தான் தற்போது கொழும்பைத் தளமாகப் பயன்படுத்துகிறது.

2000 ஆம் ஆண்டுகளிலேயே இது உருவாகிவிட்டாலும்இ பஸீர் வலி முகமட் இலங்கைத் தூதராக 2004 இல் நியமிக்கப்பட்ட பின்னர்இ இது தீவிரமடைந்துள்ளது.

தற்போது சில முஸ்லிம் தலைவர்கள்இ இணைந்து வடக்கு- கிழக்கைப் பிரிக்க வேண்டுமென்கின்றனர். இவ்வாறான குழுக்களுக்கு ஐ.எஸ்.ஐ. ஆதரவு வழங்குகிறது.

இலங்கைத் தமிழர்கள் எல்லோரும் இந்தியா சார்பானவர்களெனப் பாகிஸ்தானுக்குத் தெரியும். இலங்கைத் தமிழர்கள் இந்தியாவுக்கே ஆதரவு வழங்குகின்றனர். இலங்கை- இந்திய கிரிக்கெட் போட்டியில் கூட தமிழர்கள் இந்தியாவுக்கே ஆதரவளிக்கின்றனர்.

தமிழர்களின் இந்த மன நிலைமையை பாகிஸ்தான் தெளிவாக அறிந்ததால்தான்இ நீண்ட கால அடிப்படையில் விடுதலைப் புலிகள் இந்தியாவுடன் மட்டும்தான் உறவுகளைக் கொண்டிருப்பரென முடிவு செய்தது.

இதனாலேயே இலங்கையில் பயங்கரவாதத்தைத் தூண்டி இந்தியாவின் பாதுகாப்பை பலவீனப்படுத்துவதே பாகிஸ்தானின் நோக்கமாகும்.

கேள்வி: இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய தூதுவராக பஸீர் வலி முகமட்டிற்குப் பதிலாக ஓய்வு பெற்ற ஏயார் வைஷ் மார்ஷல் சிஷாட் அஸ்லம் சௌத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பதவியேற்ற பின்னர் அங்கு ஏதாவது மாற்றம் நிகழ்ந்துள்ளதா?

பதில்: இலங்கை விமானப்படை விமானிகள் தங்கள் கடமையை முடித்துக் கொண்டு வீடு திரும்பும்போது அவர்களைச் சுட்டுக் கொல்வதற்கு விடுதலைப் புலிகள் திட்டமிட்டிருந்ததாக சில காலத்துக்கு முன்னர் பேச்சுகள் அடிபட்டன. இதையடுத்துஇ பதற்றமடைந்த இலங்கை விமானிகள் பலர் சுகயீன லீவில் சென்றதுடன் வேறு சிலர் வேலையிலிருந்தே விலகிவிட்டனர்.

தற்போது இலங்கை விமானப்படை விமானங்களை பாகிஸ்தானிய விமானிகள் 15 பேர் செலுத்துவதாக நாங்கள் கேள்விப்படுகிறோம்.

அத்துடன்இ சென்னையிலிருக்கும் இந்தியாவுக்கான இலங்கை பிரதித் தூதுவர் பி.எம். அம்ஷா அங்கு விரும்பத்தகாத சில நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.

இலங்கையில் தமிழ் பேசும் மக்களிடையே பிரிவினைகளைத் தோற்றுவிக்கும் நோக்கில் முஸ்லிம்களின் ஆதரவைப் பெறுவதற்காக அவர் தமிழ்நாட்டிலுள்ள சில முஸ்லிம் மதப் பெரியார்களைச் சந்தித்துப் பேசியுள்ளதாக அறிகின்றோம்.

இது பெரும்பாலும் சாத்தியமாகும். ஏனென்றால்இ இந்தக் கைங்கரியத்திற்காக அவர்கள் தமிழ் பேசும் முஸ்லிம்களையே தெரிவு செய்துள்ளனர்.

கேள்வி: இலங்கையில் எந்த மாகாணங்களில் ஐ.எஸ்.ஐ. என்ற பாகிஸ்தானின் புலனாய்வுத்துறை ஊடுருவியுள்ளது?

பதில்: அம்பாறைஇ மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாணத்தில் ஐ.எஸ்.ஐ. ஊடுருவியுள்ளது.

அம்பாறையில் முஸ்லிம்கள் அதிகளவில் உள்ளதுடன் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையிலும் அவர்கள் கணிசமான அளவில் உள்ளனர்.

1981 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்த மூன்று மாவட்டங்களிலும் இவர்கள் 30 சதவீதமுள்ளனர். இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்பு நலன்கள் எவ்வாறுள்ளன என்பதை இப் பிராந்தியத்தில் ஐ.எஸ்.ஐ. யின் பிரசன்னம் நிரூபிக்கும்.

கேள்வி: இந்தக் கட்டத்தில் இந்தியா என்ன செய்ய வேண்டுமென நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை முதலில் இந்தியா அங்கீகரிக்க வேண்டும். நாம் எமது விடுதலையைப் பெற்றால் மட்டுமே இந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

இந்தியாவை எமது தாய் நாடாகவே கருதுகின்றோம். எமது கலாசாரம் இந்தியாவிலிருந்தே வந்தது. நீண்ட கால அடிப்படையில் ஈழமானது இந்தியாவின் சொத்தாகவேயிருக்கும்.

கேள்வி: விடுதலைப் புலிகளும் இந்திய புலனாய்வுத் துறையும் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது உண்மையா?

பதில்: இது தொடர்பாக எமக்கு எதுவுமே தெரியாது. எனினும் இந்தியாவுடன் புலிகள் கைகோர்க்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பது தெளிவு.

கடந்தவற்றையெல்லாம் மறந்து விடுங்களெனப் புலிகளும் இந்தியாவைக் கேட்டுள்ளனர். இந்தியாவின் ஆதரவின்றி எதனையும் செய்ய முடியாதென்பதை புலிகள் உணர்ந்துவிட்டதையே இது காட்டுகின்றது.

கேள்வி: விடுதலைப் புலிகளுக்கு இந்தியா இராணுவ உதவிகளை வழங்குமென நீங்கள் நினைத்துப் பார்க்கிறீர்களா?

பதில்: இந்தப் பிராந்தியத்தில் மகிந்த ராஜபக்‌ஷவினதும் பாகிஸ்தானினதும் நடவடிக்கைகள்இ இந்தியா இவ்வாறானதொரு நிலைமைக்குத் தள்ளப்படும் சூழ்நிலையைத் தோற்றுவித்து வருகின்றன.

கேள்வி: ஈழம் உருவாகினால் அது இந்தியாவின் பாதுகாப்பு நலன் சார்ந்ததாயிருக்குமென்கிறீர்களா?

பதில்: நாங்களொரு சிறிய தேசம். இந்தியா போன்றதொரு நாட்டை எங்களால் எதிர்க்க முடியாது. நாங்கள் இந்தியாவுடன் மிகச் சிறந்த உறவைக் கொண்டிருப்போம். இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவோ அல்லது பாகிஸ்தானோ காலடி வைக்க நாம் அனுமதிக்கமாட்டோம்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..