பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow தாயகம் - தேசியம் - சுயநிர்ணய உரிமை அனைத்தையும் வென்றெடுப்போம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

தாயகம் - தேசியம் - சுயநிர்ணய உரிமை அனைத்தையும் வென்றெடுப்போம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 28 September 2006
sized_denmark-flagஐரோப்பிய நாடாளுமன்ற வெளிவிவகார டென்மார்க் உறுப்பினர்களுடன் சந்திப்பு
ஈழவானில் வல்லூறுகள் அல்ல வெண்புறாக்களே வட்டமடிக்கவேண்டுமென செஞ்சோலை வளாகத்தின்மீதான விமானத்தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்ட மாணவ கண்மணிகளுக்கான அஞ்சலியுடன் கீழ்வரும் கோரிக்கைகள் சுமந்த விடையங்களோடு 30.09.2006 அன்று டென்மார்க்கின் வயன் நகரில் பி.பகல் 5.00 மணிக்கு கவனஈர்ப்புக்கான கருத்தாடல் நடைபெறவுள்ளது.
அதன்பின்பாக  03.10.2006 செவ்வாயன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார டென்மார்க்கின் உறுப்பினர்களுடன் நேரடிச் சந்திப்பும் இடம்பெறவுள்ளது. 

நமது வேரும், வேரடி மண்ணும் தாயகத்தே அழிவுக்குள்ளாகுவதனையும், மனிதமும் மனித உரிமைகளும் உரியமுறையில் நிலைபெறவும், தமிழீழ மக்களின் சமாதான - சனநாயக வாழ்வுக்கு வழிதேடி, றடிக்கல வென்ஸ்ரவின் தென் பிராந்திய சபைக்கான உப உறுப்பினர் Stedfortraeder திரு.த.தர்மகுலசிங்கம் அவர்களின் முயற்சியுடன், கலாச்சார - சமாதான அபிவிருத்திமையமும் (CCPD) இணைந்து இச் சந்திப்பினை ஏற்பாடு செய்துள்ளனர்.

சிறிலங்காவினால் தமிழர் தாயகத்தின்மீது திணிக்கப்பட்டுள்ள யுத்தத்தினையும் படுகொலைகளை நிறுத்தும்படியும், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தையினை நடாத்துமாறும், இறுதியாக ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையினூடு கிடைக்கப்பெற்ற தீர்மானங்களை சிறிலங்கா அரசானது தாமதமின்றி நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும், தமிழ்மக்கள் மீதான படுகொலைகள், மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்காக டென்மார்க் அரசு காலம் தாழ்த்தாது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டத்திலான ஒருவரைத் தெரிவுசெய்து அனுப்பிவைக்கும்படியும், ஐரோப்பிய யூனியன் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பாராபட்சமாக விதித்திருக்கும் தடையினை விலக்கவேண்டுமென மேற்படி கோரிக்கைகள் முன் வைக்கப்படுகின்றது.

இச் சந்திப்பானது பெல்யியத்தில் ஐரோப்பிய யூனியனின் வெளிவிவகார ஆணைக்குழு வளாகத்தில் நடைபெறும்.

அத்துடன் இலங்கையிலிருந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும் இணைந்துகொள்வதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.


எம்.சி.லோகநாதன் (CCPD)
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..