பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow தி.மு.க. கூட்டணியில் இணைந்தது விடுதலைச் சிறுத்தைகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

தி.மு.க. கூட்டணியில் இணைந்தது விடுதலைச் சிறுத்தைகள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 28 September 2006
sized_thirumavalavan-04-200தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு, அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறி, கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. கூட்டணியில் இணைந்தது.

தி.மு.க. தலைவர் கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில் நேற்று புதன்கிழமை மாலை சந்தித்துப் பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன், தாங்கள் தி.மு.க. கூட்டணியில் இணைவதாக அறிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீட்டில் எங்களுக்கு உரிய பங்கை அ.இ.அ.தி.மு.க. வழங்கவில்லை. தி.மு.க. தலைவரை சந்தித்தேன்.

அவர் எங்களை வாஞ்சையுடன் வரவேற்று கூட்டணியில் இணைத்துக் கொண்டார். உள்ளாட்சித் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு உரிய பங்கு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன் என்று திருமாவளவன் கூறினார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..